'காரி' - விமர்சனம் !
Updated: Nov 26, 2022

காரியூர் கிராம மக்களும் சிவனேந்தல் கிராம மக்களும் ஊர் கோவில் நிர்வாகத்திற்காக சண்டையிட்டு கொள்ள,,,, ஊர் பஞ்சாயத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி ஜல்லிக்கட்டில் எந்த ஊர் மக்கள் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சொந்தம் என ஊர் பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்படுகிறது .
காரியூர் சார்பில் ஊர் திருவிழா நடத்துவது சம்பந்தமாக ஊரில் வாழ்ந்த ஆடுகளம் நரேனை ஊருக்கு அழைத்து வர ஊர் பெரியவரான நாகி நீடு சென்னைக்கு செல்கிறார்.
சென்னையில் உள்ள ஒரு ரேஸ் கோர்ஸில் ஜாக்கியாக இருக்கும் சசிகுமாரும் அவரது தந்தை ஆடுகளம் நரேனும் குதிரைகளை பராமரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

பந்தயத்தில் யாராலும் ஜெயிக்க முடியாத அளவில் சசிகுமார் தன் குதிரையை தயார் செய்து வைத்திருக்கிறார்.
ஒரு போட்டியில் சசிகுமாரும் அவரது குதிரையும் கலந்துக் கொள்ளும் நேரத்தில்,,, குதிரை ஓட்டும் ஜாக்கியான நண்பன் பிரேம் அழுத்தமான நிலையில் அமைதியாக இருப்பதை பார்த்து என்ன பிரச்சனை என சசிகுமார் கேட்க ,,,தன் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிப் பெற்றால் மட்டுமே அதில் வரும் பணத்தை என் மனைவியின் மருத்துவ தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என பிரேம் சசிகுமாரிடம் தெரிவிக்கிறார்.
இதனால் சசிகுமார் பிரேமுக்காக விட்டுக் கொடுத்து ஜெயிக்கும் தன் குதிரையை தோற்கடிக்க செய்கிறார். . இதனால் போட்டியில் தோல்வியடைந்த குதிரையை முதலாளி ராம்குமார் சுட்டுக் கொன்று விடுகிறார்.
இதனை பொறுத்து கொள்ள முடியாத சசிகுமாரின் தந்தையான ஆடுகளம் நரேன் ஜெயிக்கும் குதிரையை தோற்கடிக்க செய்ததை நம்பிக்கை துரோகம் செய்ததாக சசிகுமாரிடம் வாக்குவாதம் செய்யும்போது,,, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிடுகிறார்.
குதிரைக்கு தான் செய்த துரோக குற்ற உணர்ச்சியில் இருக்கும் சசிகுமாரை சந்தித்த நாகி நீடு,,,,,, ஊர் பிரச்சனையை சசிகுமாரிடம் சொல்லி அவரை ஊருக்கு அழைத்து செல்கிறார்.

ஊர் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி பதினெட்டு வகையான காளைகளை சிவனேந்தல் கிராமத்தினர் வாடி வாசலில் இறக்க,,,,,
காரியூர் கிராமத்தினர் பதினெட்டுப் பேர் காளைகளை அடக்க வேண்டும். போட்டியில் ஜெயிப்பவர்கள் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்கலாம் என முடிவு செய்யப்படுகிறது.
முடிவை தெரிந்து கொண்ட சசிகுமார் காரியூர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்க களமிறங்குகிறார் .
முடிவில் எந்த கிராம மக்களிடம் கோவில் நிர்வாகம் சென்றது ?
காரியூர் சார்பில் காளைகளை அடக்க வாடி வாசலில் களமிறங்கிய சசிகுமார் பாய்ந்து வரும் காளைகளை அடக்கினாரா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'காரி'
நாயகனாக சசிகுமார் ,,, ,,,,, தந்தை மேல் பாசம் மகனாக உணர்ச்சிமயமான காட்சிகளிலும் ,,, காதல் காட்சிகளில் இயல்பாக ,,, ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக கதையுடன் பயணித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்துள்ள பார்வதி அருண் இயற்கையான அழகில் கிராமத்து மண் மணம் மாறாத நடிப்பில் ஜொலிக்கிறார் !
அழுத்தமான கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் ! வில்லனாக ஜே டி சக்ரவர்த்தி , இளசுகளை ஏங்க வைக்கும் சம்யுக்தா ,பாலாஜி சக்திவேல் ,அம்மு அபிராமி ,ரெடின் கிங்ஸ்லி , அருண் மொழி தேவன் ,பிரேம் என அனைவரும் கதைக்கேற்றபடி நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
கதையின் வேகத்திற்கு இணையான இமானின் இசை தாண்டவம் !
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் இரவு நேர வெளிச்சத்தில் பதினெட்டு வகையான காளைகளை காட்சிப்படுத்திய விதமும்,,,,, ஜல்லிக்கட்டில் சீறி வரும் காளைகளை பல வித கோணங்களில் காட்சிப்படுத்திய அழகும் மிரட்டல் ! இயக்குனருக்கு பக்க துணையான இவரது ஒளிப்பதிவு !
இரண்டு கிராமத்துக்கும் உள்ள கோவில் நிர்வாக பிரச்சனையை ,,,, ஜல்லிக்கட்டு போட்டியுடன் இணைத்து ,,, ரசிக்கும் வசனங்களுடன் ,,,,, கதையின் வேகத்திற்கு இணையான திரைக்கதையுடன் ,,, கிராமத்து மக்கள் காளைகள் மேல் வைத்துள்ள பாசத்தையும் , உணர்ச்சிகளையும் காட்சிகளால் அழகாக வெளிப்படுத்தி,,,,, பிரம்மாண்டமான மிரட்டும் காளையான 'காரி' காளையை கதையுடன் பயணிப்பதுபோல காட்சிகள் அமைத்து அனைவரும் பாராட்டும் படியான அதிரடி ஆக்க்ஷன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹேமந்த் குமார் .
ரேட்டிங் : 4./ 5