'ஏஜெண்ட் கண்ணாயிரம்' - விமர்சனம் !

கணவரான ஜமீன்தார் குரு சோமசுந்தரம் வீட்டில் தாலி கட்டாத மனைவியாக சிறுவனான தன் மகன் சந்தானத்துடன் வேலைக்காரியாக வாழ்கிறார் இந்துமதி.
ஜமீன்தார் குரு சோமசுந்தரம் இந்துமதியை திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், முதல் மனைவியும் அவரது மகன்களும் இந்துமதியை அவமானப்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் தங்கத்தினால் செய்த துப்பாக்கி ஒன்று காணாமல் போக இந்துமதி மீது திருடி பட்டம் சுமத்தி குரு சோமசுந்தரத்தின் முதல் மனைவி வெளியில் துரத்த இருக்கும் நிலையில்,,,,, சிறுவனான சந்தானம் அனைவரது முன்னிலையில் அந்த தங்க துப்பாக்கியை கண்டுபிடித்து தருகிறார் .
சந்தானம் இளைஞனாக வளர்ந்த பின் துப்பறியும் டிடெக்டிவ் ஏஜெண்ட் ஆக நகரில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கிறார். மிக பெரிய டிடெக்டிவ் ஏஜெண்ட் ஆக மாற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சந்தானம் தன் தாயான இந்துமதியின் மரண செய்தி கேட்டு ஊருக்கு கிளம்புகிறார்.
ஊருக்கு செல்வதற்குள் அவருடைய தாயின் இறுதி சடங்கை சந்தானம் இல்லாமல் செய்து முடித்து விடுகின்றனர். அதன்பின்னர் ஜமின்தாரான தந்தை குரு சோமசுந்தரம் சொத்தில் தன் தாய்க்கும் பங்கு இருப்பதால் சந்தானம் அந்த கிராமத்தில் தங்க வேண்டியநிலை ஏற்படுகிறது.
இந்நேரத்தில் அந்த ஊரில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே மர்மமான முறையில் சிலர் இறந்து கிடக்கின்றனர்
டிடெக்டிவ் ஏஜெண்ட் ஆன சந்தானம் இந்த வழக்கை கையில் எடுத்து மர்ம மரணங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
துப்பறியும் சந்தானத்தின் கவனத்தை திசைதிருப்ப கொலையாளிகள் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் .
முடிவில் தண்டவாளத்தின் அருகே மட்டும் இறந்த உடல்கள் இருக்க காரணம் என்ன ?
தண்டவாளத்தின் அருகே உடல்கள் இருப்பதால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட உடல்களா ?
அது உண்மையென்றால் கண்டிப்பாக பயணிகள் ரயிலாக இல்லாமல் சரக்கு ஏற்றும் ரயிலாகத்தான் இருக்கும் என துப்பறிக்கிறார் சந்தானம் .
இறுதியில் குற்றவாளிகளை சந்தானம் கண்டுபிடித்தாரா ?
சந்தானத்தின் முயற்சியில் குற்றவாளிகள் போலீஸிடம் சிக்கினார்களா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்'
கதையின் நாயகனாக சந்தானம் எதார்த்தமான வசனங்களில்,,, வழக்கமான நடிப்பிலிருந்து மாறுபட்டு ,,,, உடல் மொழியில் டிடெக்டிவ் ஏஜெண்ட் ஆக கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !
நாயகியாக சந்தானத்திற்கு இணையாக டாக்குமெண்டரி எடுக்கும் பெண்ணாக ரியா சுமன் நடிப்பில் இயல்பு !
முனீஷ்காந்த் , புகழ் .ரெடின் கிங்ஸ்லி , இந்துமதி ,குரு சோமசுந்தரம் , ஈராமதாஸ் ,ஆதிரா , மதன் என நடித்தவர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை விட பின்னணி இசை அசத்தல் !
தேனி ஈஸ்வர் - சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜெண்ட்ஸ்ரீவத்சவா படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் .காமெடியான வசனங்களை பேசி ஜாலியாக அனைவரையும் கலாய்க்கும் சந்தானத்தை வித்தியாசமாக துப்பறியும் டிடெக்டிவ் ஏஜெண்ட் ஆக ,,,, விறு விறுப்பான கதையுடன் ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்பில் க்ரைம் திரில்லராக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மனோஜ் பீதா
ரேட்டிங் : 3 . / 5