'இன்ஷா அல்லாஹ்' விமர்சனம்

இஸ்லாமிய சமூகத்தில் உள்ள மார்க்க நெறிமுறைகளான ஐந்து கடமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம்தான் 'இன்ஷா அல்லாஹ்'
இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் ஐந்து கடமைகளைகடைபிடிக்க வேண்டும்.
அந்த ஐந்து கடமைகளைத் தவறாது நிறைவேற்றுபவர்கள் இறப்பிற்கு பின்னால் சொர்க்கத்திற்கு சென்று இன்பங்களை அனுபவிப்பார்கள்.
கடமையிலிருந்து தவறுபவர்கள் நரகத்திற்கு சென்று கடும் இன்னல்களை அனுபவிப்பார்கள்
ஐந்து கடமைகளை முழுமையாக செய்யத் தவறிய ஒருவரது இறப்பையும் கடமைகளை முழுமையாக செய்த ஒருவரது இறப்பையும் ஒப்பிட்டு காட்டும் படம்தான் 'இன்ஷா அல்லாஹ்'
திரைப்படத்தின் தொடக்கத்தில் இந்த கருத்து வசனங்களாக இஸ்லாமிய மக்களுக்கு சொல்லப்படுகிறது .

ஒரு இந்து பெண் தன் வீட்டில் கார் டிரைவர் ஆக பணிபுரியும் முஸ்லீம் ஒருவரை காதலித்து, பின் அவள் மதம் மாறி அந்த இளைஞனுடன் வாழும் வாழ்க்கை ,
ஆதரவற்ற நிலையில் வாழும் வயதான முஸ்லீம் தம்பதியினர் வாழ்க்கை ,
தன் தம்பியை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து ஆடம்பரமாக வாழ்ந்த ஒருவர் பின்னாளில் படுத்த படுக்கையாக இறப்பை எதிர்நோக்கும் ஒருவரது கடைசி கால வாழ்க்கை,
இறந்தவர்களை அடக்கம் செய்யும் ஜீவ சாந்தி என்ற அறக்கட்டளையினர்
என நான்கு கதைகளை ஒருங்கிணைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைந்துள்ளார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்
பிர்தவுஸ் ராஜகுமாரனின் ரணம் என்ற சிறுகதையும் ஒரு புள்ளியில் இணைவதைக் கண்ட பாஸ்கரன் அந்த இரு சிறுகதைகளையும் இணைத்து, தோப்பில் முகமது மீரானின் அன்பிற்கு முதுமையில்லை என்ற சிறுகதையையும் சேர்த்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
கதைக்கேற்றபடி டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவு உள்ளது குறிப்பாக செம்மறி ஆட்டு கூட்டத்தை கருட பார்வையாக ட்ரோன் கேமராவில் படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.
இந்தியாவில் முதன் முதலாகக் கட்டப்பட்டதாக சொல்லப்படும் கொடுங்கலூர் சேரமான் பள்ளிவாசலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது!

உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ள படம் 'இன்ஷா அல்லாஹ்'
படத்தில் நடித்துள்ள மோகன் ,மேனகா ,நம்பிராஜன் ,கவிஞர் விக்கிரமாதித்யன் ,பகவதி அம்மாள் ,நரேன் பாலாஜி என அனைவரும் கதைக்கேற்றபடி நடித்துள்ளனர் .
படத்தில் பின்னணி இசை இல்லை, சில காட்சிகளில் வசனங்கள் கேட்கவில்லை.இயக்குனர் கவனித்து இருக்கலாம்
இஸ்லாம் மார்க்க நெறிமுறைகளாக ஐந்து கடமைகளை வலியுறுத்தி ,அதனின் அடிப்படையில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.