'கட்டா குஸ்தி' - விமர்சனம்! 4.5 / 5 குடும்பத்துடன் கண்டுகளிக்கும் காமெடி திருவிழா !

கேரள மாநில விளையாட்டில் பிரபலமான கட்டா குஸ்தி மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு சிறந்த வீரராக ஜெயிக்க முயற்சி செய்யும் முனிஷ்காந்த் போட்டி நேரத்தில் உடல் ஒத்துழைக்காத பிரச்சனையால் ஜெயிக்க முடியாமல் பயிற்சியாளரின் கோபத்திற்கு ஆளாகிறார் .
போட்டி நடக்கும்போது சிறு வயதிலிருந்து சித்தப்பாவான முனிஷ்காந்துடன் உடன் செல்லும் ஐஸ்வர்யா லக்ஷ்மி அவர் போட்டியில் குஸ்தி போடுவதை ஆர்வமாக கவனித்து வந்ததில் பின்னாளில் கட்டா குஸ்தி மல்யுத்த விளையாட்டில் சிறந்த வீராங்கனையாக மாறுகிறார் .
திருமணத்திற்காக பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை விட்டார்,,,, கட்டா குஸ்தி மல்யுத்த வீராங்கனையான ஐஸ்வர்யா லக்ஷ்மியை தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பயப்படுகின்றனர் .
இந்நிலையில் நாயகன் விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டால் தன்னைவிட படிப்பில் குறைந்தவளாகவும் முடி அடர்த்தியாக நீளமாகவும் தன் மனைவி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாமனான கருணாஸின் உதவியுடன் பெண் தேடி வருகிறார்.
ஒரு கட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி நண்பனான முனிஷ்காந்தை கருணாஸ் சந்திக்க,,,, விஷ்ணு விஷால் திருமணத்திற்கு பெண் தேடுவதை அறிந்து விஷ்ணு விஷால் எதிர்பார்க்கும் பெண்ணாக,,,, படிப்பையும் குறைத்து ஐஸ்வர்யா லக்ஷ்மியின் தலை முடியில் செயற்கை கூந்தலை இணைத்து விஷ்ணு விஷாலிடம் பொய் சொல்லி அவருக்கு ஐஸ்வர்யா லக்ஷ்மியை திருமணம் செய்து வைத்து விடுகிறார் முனிஷ்காந்த்.
தான் எதிர்பார்த்தபடி அமைந்த மனைவியான ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் விஷ்ணு விஷால் சந்தோசமாக வாழ்ந்து வரும் நேரத்தில் , இருவரும் தம்பதிகளாக கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் போது ,,,, ஏற்கனவே நடந்த ஒரு பிரச்சனையில் விஷ்ணு விஷாலை வில்லன் தன் அடியாட்களுடன் கொல்ல வரும்போது விஷ்ணு விஷாலை காப்பாற்ற ஊர் மக்கள் முன்னிலையில் அதிரடியாய் களத்தில் இறங்கி வில்லனையும் அவனது அடியாட்களையும் பந்தாடுகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி,,,,,

அனைத்து உண்மைகள் தெரிந்தும் அமைதியாய் இருக்கும் விஷ்ணு விஷால் தன் மாமனான கருணாஸை ஐஸ்வர்யா லக்ஷ்மி அவமதித்த காரணத்தினால் அவருடன் வாழ பிடிக்காமல் பிறந்த வீட்டிற்க்கு அனுப்பி விடுகிறார் .
மேலும் கருணாஸின் பேச்சை கேட்டு ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் கட்டா குஸ்தி மல்யுத்த போட்டியில் நேரடியாக மோதி ஐஸ்வர்யா லக்ஷ்மியை ஜெயிக்க பயிற்சியாளர் ஹரிஷ் பேராடி மூலம் தீவிர பயிற்சி எடுக்கிறார் விஷ்ணு விஷால்
முடிவில் ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் கட்டா குஸ்தி மல்யுத்தத்தில் நேரடியாக மோதிய விஷ்ணு விஷால் போட்டியில் வெற்றி பெற்றாரா ?விஷ்ணு விஷாலும் , ஐஸ்வர்யா லக்ஷ்மியும் இல் வாழ்க்கையில் மீண்டும் இணைந்தார்களா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் 'கட்டா குஸ்தி'
நாயகன் விஷ்ணு விஷால் துடி துடிப்புள்ள எந்த வேலையும் செய்யாமல் பந்தாவாக சுற்றி திரியும் இளைஞனாக ,,,, கபடி வீரனாக ,,,, ஐஸ்வர்யா லக்ஷ்மி தனக்கு அடங்கிய மனைவியாக இருக்க முயற்சி செய்யும் கணவனாக ,,, இறுதியில் ஆக்க்ஷன் காட்சிகளில் கட்டா குஸ்தி மல்யுத்த வீரனாக என அனைத்திலும் அனுபவ நடிகராக இயல்பான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார்.
நாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி கட்டா குஸ்தி வீராங்கனையாக போட்டிகளில் தன்னுடன் மோதுபவர்களை தூக்கி எறிவதிலும்,,,,, விஷ்ணு விஷாலை காப்பாற்ற வில்லனின் ஆட்களை பந்தாடும் போது அதிரடி வீராங்கனையாக மாறும்போதும் ,,,,, விஷ்ணு விஷாலின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான மனைவியாக,,,,,, கீர்த்தி கதாபாத்திரமாகவே படம் முழுவதும் சிறப்பாக பாராட்டும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!
வில்லனாக வரும் சத்ரு ,முனிஷ் காந்த், கருணாஸ், ஹரிஷ் பேராடி ,காளி வெங்கட், ரெடிங் கிங்ஸ்லி என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !!
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் கதைக்களத்திற்கு பக்க பலம் !!

கட்டா குஸ்தி எனப்படும் மல்யுத்த விராங்கனையாக நாயகியை மையப்படுத்திய கதையில் ,,,,விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தை கவனமாக வடிவமைத்த வகையிலும்,,,, மனைவிகளை பற்றி கருணாஸ் பேசும் விஷயங்கள் ஒரு புறம்,,,, மறுபுறம் பெண்கள் கணவன்களை பற்றி பேசும் விஷயங்களின் மூலம் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை அழுத்தமாக சொல்லும்போது அதிரடி சிரிப்பினால் தியேட்டரே அதிரும் வகையில்,,,,, படம் பார்க்கும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கும்படி கதை திரைக்கதை அமைத்து,,,,,கணவன் மனைவி உறவில் மனைவியின் முக்கியத்துவத்தை வசனங்களின் மூலம் சொல்வதுடன்,, குடும்பத்துடன் அனைவரும் கண்டுகளிக்கும் குடும்ப காமெடி படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் செல்லா அய்யாவு .
ரேட்டிங் : 4. 5 / 5