'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' - ரேட்டிங்:4 / 5 இணைய தொடர் விமர்சனம்! பதற வைக்கும் க்ளைமாஸ்க்

ஆள் நடமாட்டமில்லாத வெட்ட வெளியான ஒரு இடத்தில் அழகான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார் .
பிணமாக கிடக்கும் அந்த பெண் யார்? எதற்காக யாரால் கொல்லப்பட்டார் என்பதை போலீஸ் விசாரிக்கும்போது,,,,, கொலை செய்யப்பட்ட பெண்,,,, ஆண்கள் தங்கும் விடுதி நடத்தும் லைலாவின் மகள் சஞ்சனா என போலீஸ் கண்டுபிடிக்கிறது .
இந்நிலையில் இவ் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உயர் அதிகாரி ஒப்படைக்கிறார்,,,,
இக் கொலை வழக்கில் ஆரம்பத்தில் விடுதியில் தங்கி இருக்கும் குமரன் தங்கராஜனை சந்தேகப்படும் நபராக போலீஸ்,,, காவலில் வைத்து விசாரிக்கிறது ,,,,
குமரன் தங்கராஜன் நல்லவன் அவனை தன் மகளான சஞ்சனாவுக்கு திருமணம் செய்து வைக்க இருக்கும் நிலையில்,,,, அத்தை வீட்டுக்கு செல்வதாக சென்றவளை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டார்கள் என விசாரிக்க தொடங்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் லைலா சொல்ல,,,,
காவலில் இருந்து குமரன் தங்கராஜனை விடுவிக்கிறது போலீஸ் ,,,,

பல மர்மங்கள் நிறைந்த இவ் வழக்கில் விசாரணையில் எந்தவித துப்பும் கிடைக்காமல் எஸ்.ஜே.சூர்யா திணறும் நிலையில்,,, குடி போதையில் தற்கொலை செய்து கொள்கிறார் குமரன் தங்கராஜன்.
தற்கொலை செய்து கொண்ட குமரன் தங்கராஜனை,,,,,, சஞ்சனாவை கொலை செய்த குற்றவாளி என அடையாளம் காட்டி வழக்கை முடிக்கிறது போலீஸ் மேலிடம் !
முடிந்துவிட்ட இவ் வழக்கை எஸ்.ஜே.சூர்யா மீண்டும் விசாரிக்க உயர் அதிகாரியை நாட,,,,, மேலிட உத்தரவை மீறி இந்த வழக்கை விசாரிக்க கூடாது கடுமையான முறையில் கண்டிக்கிறார்.
இருந்தாலும் அவரது முடிவை ஏற்க மறுக்கும் எஸ்.ஜே.சூர்யா தனி ஒரு மனிதனாக அருவி பாலாஜி துணையுடன் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடுகிறார் !
சஞ்சனாவை கொலை செய்த குற்றவாளியை எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடித்தாரா ?
என்ன காரணத்திற்காக சஞ்சனா கொலை செய்யப்பட்டார் ?
சஞ்சனாவை கொலை செய்த அந்த மர்ம நபர் யார் ? என்ற கேள்விகளுக்கு
பதில் சொல்லும் இணையதொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக எஸ்.ஜே.சூர்யா வழக்கமான நடிப்பிலிருந்து மாறுப்பட்டு,,,,,,, இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் . உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் மன அழுத்தத்தினால் மனைவியிடம் புலம்பும் காட்சிகளில் கதாபாத்திரமாகவே வாழ்கிறார் ,,,,

வெலோனியாக நடித்துள்ள அறிமுக நடிகை அழகான சஞ்சனா,,,, துறு துறு நடிப்பில் வெகுளித்தனமான வசன உச்சரிப்பில் தொடரரை பார்க்கும் ரசிகர்களே கொலை செய்யப்பட்ட வெலோனி என்ற கதாபாத்திரம் மீது பரிதாபப்படும் வகையில் அபாரமான நடிப்பில் அசத்துகிறார் !
எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக ஸ்மிருதி வெங்கட் கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !
ஆங்கிலோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில் வெலோனியின் அம்மாவாக நடித்துள்ள லைலா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !!
கதாபாத்திரத்தின் சிறப்பை உணர்ந்து கன்னியாகுமரி மாவட்ட தமிழை இயல்பாக உச்சரிக்கும் விவேக் பிரசன்னா,,,,எழுத்தாளராக நாசர், பத்திரிக்கை நிறுவன அதிபராக ஹரிஷ் பெராடி, எஸ் ஜே சூர்யாவின் உதவியாளனாக அருவி பாலாஜி,,,, திலீப் சுப்பராயன்,,,,குமரன் தங்கராஜ் அவினாஷ், அஸ்வின் குமார், விக்கி, ஆதித்யா, வைபவ் முருகேசன், மீரன் மீதின், அஸ்வின் ராம், பிரதிப் குமார்,மகேஸ்வரன், குலபுலி லீலா என தொடரில் நடித்துள்ள அனைவருமே ரசிகர்களின் மனதில் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரங்களாக வாழ்கின்றனர் !!
இசையமைப்பாளர் சைமன் கே.கிங் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை அசத்தலான மிரட்டல் !
ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !!

8 பாகங்களை கொண்ட இவ் இணையத்தொடரின் கதைக்களம் ! முதல் பாகம் தொடங்கும்போதே சஞ்சனாவின் கொலையுடன் ஆரம்பிக்க அடுத்து வரும் பாகங்கள் அனைத்துமே தொடரை பார்ப்பவர்கள் எதிர்பார்க்குமளவில் கதையுடன் ரசிகர்களை பயணிக்க வைக்கிறது .
வெலோனி என்கிற அழகான இளம் பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் ,,, இவ் வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி ஆரம்ப கட்ட விசாரணையில் திணறும்போது முடிவில் மிக திறமையாக உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் . சஸ்பென்ஸ் க்ரைம் கலந்த திரில்லர் நிறைந்த இந்த கதையை,,, இணைய தொடராக,,, மிரட்டலான இசையுடன் ,,,, கதையின் வேகத்திற்கு இணையான திரைக்கதையுடன் 8 வது பாகம் முடிய சில மணி துளிகளுக்கு முன் யாருமே எதிர்பார்க்காத ,,,, தொடர் பார்க்கும் ரசிகர்களே யூகிக்க முடியாத,,,, உண்மையான குற்றவாளியை க்ளைமாஸ்க்கில் காட்சிப்படுத்திய விதத்திலும்
,,,, தொடரின் முடிவில் பதற வைக்கும் திருப்பு முனையான சஸ்பென்ஸை இறுதி வரை காப்பாற்றிய வகையிலும் இத் தொடரை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸை மிக திறமையான இயக்குனராக மனதார பாராட்டலாம் !!
ரேட்டிங் : 4 / 5