top of page

'வரலாறு முக்கியம்' - விமர்சனம் !இளைஞர்கள் குஷியாக கொண்டாடும் படம் !


கோவையில் ஸ்கூல் மாஸ்டராக வேலை செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் மகனான யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா,,,,,,,

அரசியல் பிரமுகரான விடிவி கணேசுடன் எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருந்தால் போதும் என,,,, ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்,,,,, கேரளாவில் இருந்து தன் மனைவி மற்றும் மகள்களான காஷ்மீராபர்தேசி , பிரக்யாநாக்ரா ஆகியோருடன்,, ஜீவா இருக்கும் அதே தெருவில் குடியேறுகிறார் சித்திக் .


இதில் பிரக்யா நாக்ரா ஜீவாவின் வீட்டில் நுழைந்து நாங்கள் கேரளாவில் இருந்து குடும்பத்துடன் குடி வந்துள்ளோம் நீங்கள் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என இனிப்புடன் அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார் .


பிரக்யா நாக்ராவை காதலிக்க ஜீவா அவரை பின் தொடர ,,,,,,பிரக்யா நாக்ராவின் அக்காவான காஷ்மீரா பர்தேசியை பார்த்ததும் அழகில் மயங்கிய ஜீவா அவரை காதலிக்க,,,,ஆரம்பத்தில் மறுக்கும் காஷ்மீரா பர்தேசி பின்பு ஜீவாவை காதலிக்க,,, இருவரும் காதலிக்கின்றனர் .




இதற்கிடையில் ஜீவாவும் -காஷ்மீரா பர்தேசியும் காதலிப்பதை தெரிந்து கொண்ட சித்திக் அவர்களின் காதலை எதிர்க்க,,, முடிவில் காஷ்மீரா பர்தேசியை துபாய் மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்.


ஜீவாவும் தான் செய்த தவறுக்கு கே எஸ் ரவிக்குமாருடன் சித்திக்கை சந்தித்து அனைவரும் நம்பும்படி மன்னிப்பு கேட்கிறார் .


இறுதியில் காஷ்மீரா பர்தேசியை காதலித்த ஜீவா காதலில் வெற்றி பெற்று காஷ்மீரா பர்தேசியுடன் ஒன்று சேர்ந்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'வரலாறு முக்கியம்'


கதையின் நாயகனாக ஜீவா,, சந்தோசமாக வாழும் ஜாலி இளைஞனாக,,,,, பிரக்யா நாக்ராவை பார்த்ததும் காதல் கொள்பவர் பின்பு அக்காவான காஷ்மீரா பர்தேசியை பார்த்தவுடன் அழகில் மயங்கி அவரை காதலிக்கும் காதலனாக ,,,,, விடிவி கணேசுடன் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டா ரசிகர்களின் சிரிப்பில் தியேட்டரே அதிரும் காமெடி நடிகனாக,,, வெவ்வேறு பரிணாமங்களில் படம் முழுவதும் இயல்பான நடிப்பில் ஜொலிக்கிறார்.



அமைதியான அழகில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் நாயகியாக காஷ்மீரா பர்தேசி !

துறு துறு நடிப்பில் ரசிகர்கள் ரசிக்கும் நாயகியாக பிரக்யா நாக்ரா !


அரசியல் பிரமுகராக வி டி வி கணேஷ்,,,, கண்ணாடியில் கோடு போடும் போதும் , அடிக்கடி டெல்லியை பற்றி பேசும்போதும்,,, ஜீவா,,, சாராவுடன் சேர்ந்து அன்னக்கிளி வீட்டில் நடக்கும் காட்சிகளிலும் வயிறு குலுங்க சிரிக்க,,, கை தட்டலுடன் விசில் பறக்க காமெடியில் பட்டையை கிளப்புகிறார் !


முன்னாள் காதலி வீட்டிற்கு வந்தவுடன் கே எஸ் ரவிக்குமார் பரபரப்பாக மாறுவதும் ,,,, இதனை பார்த்து சரண்யா பொன்வண்ணனிடம் ஜீவா கேட்கும் கேள்விகளும் கலகலப்பான காமெடி கலாட்டா !


ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் கேட்கும்படியான ரகம் !! கதைக்களத்திற்கு ஏற்றபடி பின்னணி இசை !


சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !


யூ டியூப் சேனல் நடத்தும் ஜாலியான இளைஞன் ,,,ஒரு அழகிய பெண்ணை பார்த்ததும் காதல் கொள்கிறான் ,,, பெண்ணின் பெற்றோர் காதலை எதிர்க்க ,,,,, எதிர்ப்பை மீறி காதலித்த பெண்ணுடன் வெற்றிகரமாக ஒன்று சேர்வதுதான்

இப் படத்தின் கதை ,,,, இந்த கதையை மையமாக கொண்டு,, சுவாரஸ்யமான ,, விறு விறுப்பான திரைக்கதை அமைப்புடன் ,,,, கிளுகிளுப்பாக வி டி வி கணேஷை கதையுடன் பயணிக்க வைத்து ,,,காட்சிகளிலும் ,,இரட்டை அர்த்த வசனங்களிலும் ஆபாச கலப்பில்லாமல் ரசிகர்கள் கவலை மறந்து வயிறு குலுங்க சிரித்து மகிழும் காமெடி கலாட்டாவாக ,,,,, இன்றைய இளைஞர்கள் குஷியாக கொண்டாடும் ஜாலியான பொழுதுபோக்கு படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் ராஜன்.


ரேட்டிங் ; 3.5 / 5



bottom of page