top of page

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' ரசிகர்கள் சிரித்து மகிழும்"காமெடி கலாட்டா" - விமர்சனம் !


விலையுயர்ந்த நாய்களை பணத்திற்காக தன் குழுவுடன் சேர்ந்து

கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் தொழிலை செய்கிறார் கடத்தல் கேங் லீடர் வடிவேலு.


இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தாதா ஆனந்தராஜின் நாயை வடிவேலு கடத்திவிடுகிறார். ஆனந்தராஜின் நாயை கடத்தியதால் ஏற்படும் பிரச்சனையில் வடிவேலு மாட்டிக்கொள்கிறார் .


இதற்கிடையில் ,,,,, வடிவேலுவின் பெற்றோர் குழந்தை வரம் வேண்டி சக்தியுள்ள தெய்வமான பைரவர் கோவிலுக்கு சென்றபோது,,, யோகத்தில் பிறந்த நாய் குட்டியை வடிவேலுவின் பெற்றோரிடம்,,

அங்குள்ள ஒரு சித்தர் கொடுக்க ,,,,அந்த நாயின் மூலம் தங்கள் குடும்பம் வளர்ச்சியடைந்ததையும்,,,, குடும்பத்தினர் அந்த நாயை பராமரிப்பதற்காக வேலைக்காரனான ராவ் ரமேஷை நியமிக்க ,,,,,வடிவேலு குடும்பத்தின் சொந்த நாயை அவன் திருடி சென்று விட , அந்த நாயின் யோகத்தால் மிக பெரிய கோடீஸ்வரனாக கோடிகளில் அவன் வாழ்ந்து கொண்டிருப்பதை தன் பாட்டி மூலம் தெரிந்து கொண்ட வடிவேலு,,,,, ராவ் ரமேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த நாயை மீட்க புறப்படுகிறார் !


நாயின் யோகத்தினால் கோடீஸ்வரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் ராவ் ரமேஷிடமிருந்து தன் சொந்த நாயை வடிவேலு மீட்டாரா ? ஆனந்தராஜின் நாயை கடத்தியதால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து வடிவேலு தப்பித்தாரா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'


நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் வடிவேலு உடல் மொழியாலும் வழக்கமான காமெடி கவுண்டர் வசனங்களிலும் படம் பார்க்கும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் படி படம் முழுவதும் காமெடி தர்பாரே நடத்துகிறார் .


காமெடி மாஸ் ஹீரோ என்பதை நடிப்பிலிலும் ,,,வசனங்களிலும்மீண்டும் நிரூபித்து குடும்பத்துடன் ரசிகர்கள் மகிழும் வகையில் நடிப்பில் ஜொலிக்கிறார் வடிவேலு.


சிரிக்க வைக்கும் தாதாவாக ஆனந்த் ராஜ் , நாயை கடத்தி அதன் யோகத்தால் கோடிகளில் புரளும் ராவ் ரமேஷ், முனிஷ்காந்த், லொள்ளு சபா ஷேஷூ, ராமர், லொள்ளு சபா மாறன், மனோபாலா, வேல ராமமூர்த்தி , சச்சு , ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


சந்தோஷ் நாராயணன் இசையில் அப்பத்தா பாடல் ரசிக்கும் ரகம்!!!! கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை அசத்தல் !


விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல் !!


பெரும் பணக்காரர்களின் நாய்களை கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறித்து பணக்காரனாக வாழ நினைக்கும் நாயகனின் கதையை கொண்டு ,,,,, வேகமான திரைக்கதை அமைப்புடன் ,,, கதையுடன் பயணிக்கும் ரசிகர்கள் ரசிக்கும்படியான காமெடி களத்துடன்,,,வடிவேலுவின் காமெடி முத்திரையை நடிப்பில் திறமையாக பயன்படுத்தி குடும்பத்துடன் அனைவரும் கவலை மறந்து சிரித்து மகிழும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுராஜ் .

ரேட்டிங் : 4./ 5
















bottom of page