‘விஜயானந்த்’ - விமர்சனம் !சரித்திரம் படைக்கும் சாமானியன் !

ஒரு சாமானியன் தனது தொழிலில் பல எதிர்ப்புகளை மீறி தடைகளை தாண்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்து சரித்திரம் படைப்பதுதான் இப் படத்தின் கதை!!
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மிகப்பெரும் தொழிலதிபரான விஜயானந்த் ரோட்லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை 'விஜயானந்த்' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார்கள்.
பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்த பி.ஜி. சங்கேஸ்வரின் மூன்று மகன்களில் ஒருவர் விஜய் சங்கேஸ்வர், .தனது தந்தையுடன் சேர்ந்து பிரிண்டிங் தொழிலை நடத்தும் விஜய் சங்கேஸ்வர். பிரிண்டிங் தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று லாரி பார்சல் சர்வீஸ் தொழில் செய்ய பி.ஜி. சங்கேஸ்வரின் அனுமதியை கேட்கிறார் .
அவர் மறுக்க,, தந்தையின் எதிர்ப்பை மீறி லாரி பார்சல் சர்வீஸ் விஜய் சங்கேஸ்வர் தொழில் செய்ய ,,,,, ஏற்கனவே லாரி சர்வீஸ் தொழில் செய்பவர்களால் பல தடைகள் வர,,,,,,எதிரிகளின் எதிர்ப்புகளை தாண்டி சோதனைகளை சாதனைகளாக்கி சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்து,,,, லாரி பார்சல் சர்வீஸ் போக்குவரத்து துறையோடு பத்திரிகை துறையிலும் சரித்திரம் படைத்து மிக பெரிய சாதனையாளராக எப்படி வெற்றி பெற்றார் என்பதை சொல்லும் படம் தான் ‘விஜயானந்த்’ படத்தின் கதை.
விஜய் சங்கேஸ்வரராக நடித்துள்ள நாயகன் நிஹால்,,,,,உடல் மொழியிலும் ,,, உணர்ச்சிமயமான காட்சிகளிலும் ,,,,, அடிதடி ஆக்க்ஷன் காட்சிகளிலும் அமைதியும் ஆக்ரோஷம் கலந்த இயல்பான நடிப்பில் விஜய் சங்கேஸ்வரராக படம் முழுவதும் வாழ்ந்துள்ளார் !!!
நிஹாலின் மனைவியாக நடித்துள்ள சிரி பிரகலாத் அமைதியான அழகில் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை தந்துள்ளார். . மகனாக நடித்துள்ள பாரத் போபனா, விஜய் சங்கேஸ்வரின் தந்தையாக வரும் ஆனந்த் நாக் ,வினயா பிரசாத் , அர்ச்சனா கொட்டிக்கே என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் காலத்துக்கேற்ற இசையில் பாடல்கள் கேட்க சிறப்பாக இருப்பதுடன் ,,, கதைக்களத்திற்கேற்றபடி பாராட்டும்படியான பின்னணி இசை அமைத்துள்ளார் !
கீர்த்தன் புஜாரி ஒளிப்பதிவில் காட்சிகளில் இயல்பு !
உலகளவில்,,,, மிக பெரிய தொழிலதிபர், பத்திரிகைத் துறை அதிபர் , அரசியல்வாதி,, அனைத்தையும் தாண்டி சிறந்த மனிதர் என பெயரெடுத்த விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களுடன் , பாடல்கள் ,,ஆக்க்ஷன் ,,,வசனங்கள் என சினிமாவுக்கான கற்பனை கலந்த திரைக்கதை அமைப்புடன் படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு ஊக்கத்துடன் உத்வேகத்தையும் ,, வாழும் வாழ்க்கையில் நம்பிக்கை தரும் தரமான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ரிஷிகா சர்மா.
ரேட்டிங் : 3.5 / 5