‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’ - விமர்சனம் !

பட்ட படிப்பு படித்தும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் நாயகன் ஸ்ரீக்கு,,, பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட வயதான ராம்ஜியை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது.
அந்த வீட்டில் சமையல் செய்ய வசுதா கிருஷ்ணமூர்த்தி வேலை செய்கிறார்.
ராம்ஜியின் வீட்டில் தங்கி அவரை பார்த்துக்கொள்ளும் ஸ்ரீ,,,உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் ராம்ஜி திறமையான விஞ்ஞானி என்பதை கண்டுபிடிக்கிறார் .
இதற்கிடையில் விஞ்ஞானி ராம்ஜிக்கு பிசியோதெரபி அளிக்க சாம்ஸ் வீட்டுக்கு வருகிறார்.
வேலைக்கார பெண்ணான வசுதா கிருஷ்ணமூர்த்தியின் அழகில் மயங்கி அடிக்கடி சல்லாபத்தில் ஈடுபடும் ஸ்ரீக்கு,,, திடீரென ஒரு நாள் வரும் போன் காலில் பேசும் நபர் ராம்ஜி கண்டுபிடித்த மருந்தை கொடுத்தால் பல லட்சம் தருவதாக சொல்ல,,,, பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி அதை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.
சாமர்த்தியமாக கோடி கோடியாய் ஸ்ரீ பணம் சம்பாதிப்பதை தெரிந்துகொண்ட வசுதா கிருஷ்ணமூர்த்தி மொத்த பணத்தையும் அவரிடமிருந்து அபகரிக்க திட்டம் போடுகிறார் . மறு புறம் விஞ்ஞானி ராம்ஜியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார்.
ஒரு கட்டத்தில் வசுதா கிருஷ்ணமூர்த்தி கை கால்கள் கட்டப்பட்ட ஸ்ரீயை கடுமையான முறையில் அடித்து பணத்தை பற்றி விசாரிக்க ,,,,, அந்த நேரத்தில் வரும் சாம்ஸ் பார்முலா இருக்கும் இடத்தை சொல்ல சொல்லி துன்புறுத்த உயிருக்கு பயந்த ஸ்ரீ,, உண்மையை சொல்லும் நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடக்கிறது.
எதிர்பார்க்காத அந்த சம்பவத்தால் வசுதா கிருஷ்ணமூர்த்தியிடமும்,,,, சாம்ஸிடமும் மாட்டி கொண்ட ஸ்ரீ உயிர் பிழைத்தாரா ??
எதிர்பார்த்த பணம் வசுதா கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்ததா ?
விஞ்ஞானி ராம்ஜியின் மருந்து பார்முலாவை சாம்ஸ் கை ப்பற்றினாரா ?
யாரும் எதிர்பார்க்காத சுவாரஸ்யமான சம்பவம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’
வேலையில்லா பட்டதாரியாக நடித்திருக்கும் ஸ்ரீ,,,, விரக்தியான இளைஞனாகவும் ,,,, அதே நேரத்தில் வசதியாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதற்கேற்ற உடல் மொழியில் நடிப்பில் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ள இளசுகளை சூடேற்றும் வசுதா கிருஷ்ணமூர்த்தி,,, ஸ்ரீயுடன் நெருக்கமாக பழகும்போது இயல்பான நடிப்பில் ரசிகர்களை சூடேற்றுகிறார்.
முடிவில் சுத்தியலால் அடித்து ஸ்ரீயை அடித்து பணத்தை பற்றி விசாரிக்கும் காட்சிகளில் மிரட்டுகிறார் .
மருத்துவராக வரும் சாம்ஸ் விஞ்ஞானி ராம்ஜியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற வரும் வில்லத்தனமான நபராக நடித்தாலும் அவர் பேசும் ‘பஞ்ச்' வசனங்களால் ரசிகர்களிடையே நடிப்பில் நகைக்சுவை நடிகராக தெரிகிறார்
பக்க வாதத்தினால் படுத்த படுக்கையாக விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கும் ராம்ஜி க்ளைமாக்ஸில் எதிர்பாரத ட்விஸ்ட் கொடுத்து நடிப்பில் கைதட்டல் பெறுகிறார்.
பாலாஜி வெங்கட்ராமனின் அளவான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் .
இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி அசத்தல் .
படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில்சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு
எளிமையான கதையை மிக சுவாரஸ்யமாக தொகுத்துள்ள படத்தொகுப்பாளர் தினேஷ் காந்தி
குறைவான பட்ஜெட்டில்,,,, சுவாரஸ்யமான,,,, விறுவிறுப்பான திரைக்கதையுடன் வித்தியாசமான கதைகளத்தில் படம் பார்க்கும் ரசிகர்கள் பாராட்டும்படி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தரமான பொழுதுபோக்கு படமாக ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வினோ.
ரேட்டிங் : 2.5 / 5