top of page

’உடன்பால்’ - திரைப்பட விமர்சனம் ! 'ஆஹா ' தமிழ் ஒடிடி !



சார்லி தனது சொந்த வீட்டில் மூத்த மகன் லிங்கா மருமகள் அபர்ணதி மற்றும் பேரக்குழந்தையோடு வசித்து வருகிறார்.


CD சினிமா பட கடை வைத்து தொழில் செய்யும் லிங்காவுக்கு செல்போனின் வளர்ச்சியால் தொழிலில் பிரச்சனை ஏற்பட,,,, கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார் .


மறுபக்கம் சார்லியின் மகளான காயத்திரி சங்கரின் கணவர் விவேக் பிரசன்னா தொழில் நஷ்டம் அடைய,,,,,,, இருக்கும் பிரச்சனையை தீர்க்க பணத்திற்காக திண்டாடுகிறார் .


இந்நிலையில் இறந்த சார்லியின் மனைவி திதிக்காக வீட்டில் அனைவரும் ஒன்று கூட,,,, லிங்காவும்,காயத்திரி சங்கரும் வாழும் வீட்டை விற்று பிரச்சனையை சமாளிக்க முடிவு செய்து,,,, தந்தை சார்லியிடம் வசிக்கும் வீட்டை விற்று பணம் கிடைத்தால் சிரமம் தீர்ந்து விடும் அதனால் வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என அனைவரும் சேர்ந்து அனுமதி கேட்க,,,வீட்டை விற்பதற்கு சார்லி மறுத்து விடுகிறார்



இந்நேரத்தில் சார்லி வழக்கமாக செல்லும் வணிக வளாகத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சில மணி நேரங்களுக்கு பிறகு திடீரென்று அந்த வளாகம் இடிந்து விழுந்துவிட்டதாக டிவி சேனலில் செய்தி வெளியாவதோடு, அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தருவதாக அரசு அறிவிக்கிறது.


இந்த விபத்து செய்தியை பார்க்கும் லிங்காவும்,காயத்திரி சங்கரும் தன் அப்பாவான சார்லி விபத்தில் இறந்து விட்டதாக நினைத்து,,,, விபத்தில் சிக்கி உயிர் இழந்த குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த 20 லட்சம் நிவாரணம் பணம் கிடைக்கப்போகிறது என எதிர்பார்க்கும் நேரத்தில்,,,,,,, யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கிறது, முடிவில் குடும்பத்தினர் அனைவரும் எதிர்பார்த்த அரசு அறிவித்த 20 லட்சம் நிவாரணம் பணம் கிடைத்ததா ? இல்லையா ?

என்பதை சுவாரஸ்யமாக கலகலப்பாக ரசிக்கும்படியான கதையுடன் சொல்லும் படம்தான் 'உடன்பால்'


சார்லியின் மகனாக நடிக்கும் லிங்கா நடுத்தர வர்க்கத்தில் கடனாளியாக வாழும் குடும்ப தலைவனாக ,,,,வீட்டை விற்று கிடைக்கும் பணத்தில் தன் பிரச்சனைகளுக்கு தீர்வு பிறக்கும் என நினைக்கும் போது ,,,,, வீட்டை விற்க முடியாது என நண்பன் சொல்லும்போது கலங்கும் காட்சிகளிலும் ,,,, அரசு அறிவித்த 20 லட்சம் நிவாரணம் பணம் கிடைக்கப்போகிறது என எதிர்பார்க்கும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் குண சித்திர நடிகராக சிறப்பாக நடித்திருக்கிறார் .



முக்கிய கதாபாத்திரத்தில் சார்லி அனுபவ நடிகராக,,, நடிப்பில் எதார்த்தம் !


சார்லியின் மகளாக வரும் காயத்திரி சங்கரும் கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !


மருமகனாக நடிக்கும் விவேக் பிரசன்னா , லிங்காவின் மனைவியாக வரும் அபர்ணதி, இளைய மகனாக நடித்திருக்கும் தீனா, மயில்சாமி ,அக்காவாக நடித்துள்ள தனம், சிறுவன் தர்ஷித் சந்தோஷ், சிறுமி மன்யாஸ்ரீ என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !!


ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும் ,,,,சக்தி பாலாஜியின் இசையுடன் , பின்னணி இசையும் கதைக்களத்திற்கு பக்க துணை !


ஆஹா தமிழ் ஒரிஜினலாக பாராட்டும்படியான படத்தை தயாரித்திருக்கிறார் கே.வி.துரை!



தங்கள் பிரச்சனைகளுக்காக வாழும் சொந்த வீட்டை விற்க தந்தையிடம் அனுமதி கேட்கும் பிள்ளைகள் ,,,பிள்ளைகளிடம் விற்க மறுப்பு தெரிவிக்கும் தந்தை.


அதன் பின் நடைபெறும் சம்பவங்களான ,,,,, இந்த கதை களத்தில் ஒரே வீட்டில் நடக்கும் கதையாக ,,,,, கதாபாத்திரங்கள் அனைத்தும் கதையுடன் பயணிக்குமளவில்,,,,,, விறு விறுப்பான ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்புடன் ஏ.ஆர்.ராகவேந்திரனுடன் இணைந்து கதை அமைத்து பணத்திற்காக நடுத்தர குடும்பம் படும் அவஸ்தையை எதார்த்தமாக சொல்வதுடன்,,,, அரசு அறிவித்த 20 லட்சம் நிவாரணம் பணம் கிடைக்க தீவிரமாக குடும்பத்தினர் போராடுவதை கலகலப்பான காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும்விதமாக தரமான காமெடி கலந்த குடும்ப படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் .


'ஆஹா ' தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வரும் டிசம்பர் 30 ஆம் தேதி !!! வெளியாகிறது காமெடி கலந்த குடும்ப படமான 'உடன்பால்’


ரேட்டிங் ; 3.5 / 5




bottom of page