’டியர் டெத்’ - விமர்சனம்!

பிறப்பு என ஒன்று இருந்தால் இவ் வுலகில் இறப்பு நிச்சயமாக உண்டு ! இதனை அனைத்து ஜீவ ராசிகளும் ஏற்றுக்கொண்டாலும் மரணத்தை கண்டு மனிதன் பயப்படுவதோடு அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் .
ஏற்றுக்கொள்ள பயப்படும் மனிதர்களுக்கு காதல் , அம்மா , குழந்தை , நட்பு என மரணங்களுடன் முடியும் நான்கு கதைகளாக முதன்முறையாக இறப்பே ஒரு கதாபாத்திரமாக மனித உருவில் மாறி மரணங்களை பற்றி சொல்லும் படம்தான் ‘டியர் டெத்’
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் சந்தோஷமான வாழ்க்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மனைவி மரணமடைகிறார் .
வயதான காலத்தில் படுத்த படுக்கையாக மரண தருவாயில் இருக்கும் தன் அம்மாவை பார்த்து கொள்ளும் வயதான மகன்

திருமணமாகி குழந்தையில்லாமல் மனதளவில் கவலைப்படும் தம்பதிகளுக்கு சில வருடங்களுக்கு பின் பிறக்கும் குழந்தை பள்ளி பருவத்தில் சிறுமியாக வியாபார சீர் கேட்டினால் காலாவதியான குளிர் பானம் குடிப்பதினால் மரணமடையும் அவலம் !
நெருக்கமான நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் கிட்னி பிரச்சனையால் ஏற்படும் ஒருவரது மரணம் என நான்கு கதைகளில் இந்த மரணங்களில் எனக்கு தொடர்பில்லை ஒன்று வயது முதிர்வு மற்றது கவன குறைவு இதுவரை மரணம் என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது என மரணம் பற்றி மனிதர்களுக்கு கதைகளாக விளக்குகிறார் மரணம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப்,,,,,
முதல் கதையில் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கும் புது தம்பதிகளாக நடித்துள்ள ஜெய் , ஸ்முருதி இரண்டாவது கதையில் நடித்துள்ள வயதான மகனான வெங்கடேசன் ,மூன்றாவது கதையில் நடித்துள்ள முத்தமிழ், அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜூவி ஆர்த்தி, சிறுமி சாய் ஜீவிதா
நான்காவது கதையாக நண்பர்களாக நடித்திருக்கும் சதிஷ் நாகராஜன், மணி போஸ், ராகேஷ் கார்த்திக், மிதுன் ருத்ரன் என நடித்த அனைத்து கலைஞர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர் !
நவீன் அண்ணாமலையின் இசையும் , அசோக் சுவாமிநாதனின் ஒளிப்பதிவும் கதைக்களத்திற்கு கூடுதல் பலம் !

அன்றாடம் நடக்கும் சம்பவங்களை கதையாக மையப்படுத்தி ஸ்ரீதர் வெங்கடேசனின் கதை, திரைக்கதை, வசனத்துடன்,,,,,, இயல்பான நான்கு கதைகளுடன் நான்கு கதைகளில் வரும் கதாபாத்திரங்களையும் இணைத்து,,,,தமிழ் திரையில் இதுவரை சொல்லாத இறப்பு என்கிற விஷயத்தை முதன்முறையாக மரணம் என்ற கதாபாத்திரம் மனித உருவில் மாறி பேசினால் எப்படி இருக்கும் என்கிற புதிய வித்தியாசமான முயற்சியில் ,,,,,, இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரேம்குமார் .
ரேட்டிங் : 3 . / 5