'வாரிசு' - விமர்சனம் !

தொழிலதிபரான சரத்குமாருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள். இதில் விஜய் மூன்றாவது மகனாவார்.
முதல் இரு மகன்களும் சரத்குமாரின் தொழிலில் அவருக்கு துணையாக இருப்பதுடன் தனக்கு பிறகு தொழிலதிபராக இருக்க வேண்டுமென்றால்
மூன்று மகன்களில் யார் சரியாக இருக்கிறார்களோ அவர்களில் ஒருவரை வாரிசாக அறிவிக்க சரத்குமார் நினைக்கிறார். ஒரு கட்டத்தில் சரத்குமாரின் போக்கு பிடிக்காத விஜய் வீட்டை விட்டு வெளியே செல்ல ,,, சரத்குமாரின் அடையாளம் தெரியாமல் சுயமாக இன்றைய தொழில் நுட்பத்துடன் தொழில் தொடங்க நினைக்கும்போது 7 வருடங்களுக்கு பின் சரத்குமாரின் 60-வது திருமணத்தில் கலந்து கொள்ள அம்மா ஜெயசுதாவின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் வீட்டுக்கு வருகிறார்
இதற்கிடையே, திருமணம் நடைபெறும் நேரத்தில் சரத்குமாரின் மூத்த மகன்கள் மூலம் தொழிலுக்கும், குடும்பத்துக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு விஜயால் மட்டுமே முடியும் என நம்பும் சரத்குமார் அனைத்திற்கும் விஜய்யை தனது அடுத்த வாரிசாக அறிவிக்கிறார். இதனால் கோபமடையும் அவருடைய அண்ணன்கள் விஜய்க்கு எதிராக செயல்படுவதோடு, தொழிலில் போட்டியாக செயல்படும் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து கொண்டு தொழிலில் சரத்குமாருக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
சரத்குமாரின் தொழிலுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து தனக்கு எதிராக செயல்பட்ட அண்ணன்களையும் , மீண்டும் குடும்பத்தில் எப்படி ஒன்று சேர்த்தார் என சொல்லும் படம்தான் 'வாரிசு'
நாயகனாக நடித்துள்ள விஜய் ..... அமைதியான அம்மா , அப்பா மீது பாசம் கொண்ட .குணசித்திர நடிகனாக .......
யோகி பாபுவுடன் காமெடியில் நகைச்சுவை நாயகனாக,,,,, எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக பாடல்களில் திரையரங்கே விசிலில் அனல் பறக்க நடனம் ஆடும் நாயகனாக ஆக்க்ஷன் காட்சிகளில் எதிரிகளை பந்தாடும் அதிரடி நாயகனாக பல்வேறு பரிணாமங்களில் படம் முழுவதும் ஜொலிக்கிறார் !!
நாயகியாக அழகான ராஷ்மிகா மந்தனா கதைக்கேற்றபடி அமைதியாக நடிப்பதுடன் ,,,, இளசுகளை சூடேற்றும் வகையில் பாடல்களில் ரசிகர்கள் மயங்குமளவில் உடைகளில் தாராளம் !
சரத்குமார் ,ஜெயசுதா , பிரபு ,பிரகாஷ்ராஜ் ,சஞ்சனா ஷாம் ,ஸ்ரீ காந்த் ,யோகி பாபு ,சங்கீதா ,சம்யுக்தா ,vtv கணேஷ் ,ஸ்ரீமன்,கணேஷ் வெங்கட்ராமன் , சதிஷ் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
பழனி கார்த்திக் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டை காட்சிபடுத்திய விதம் அருமை !
படத்தின் மற்றொரு நாயகனான தமன் இசையில் அசத்தலான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரஞ்சிதமே பாடலில் திரையரங்கே அதிரும்படியான ரசிகர்களின் கொண்டாட்டமான ஆட்டம் ,,,, பின்னணி இசையில் ருத்ர தாண்டவம் !
வம்சி பைடிபைலி ,ஹரி, அஹிஷோர் சாலமன் என மூவரது கதையில் குடும்ப பாசம் கொண்ட,,,,,,, முடிவில் உணர்ச்சிமயமான தந்தை மகனுக்கான உறவு , ஆக்க்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து ரசிகர்கள் கொண்டாடும் குடும்ப பாங்கான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வம்சி பைடிபைலி.
ரேட்டிங் : 3 / 5