‘அயலி’ - இணைய தொடர் விமர்சனம் !

1990 -ல் புதுக்கோட்டையின் அருகில் உள்ள வீரபண்ணை என்ற கிராமத்தில் பெண் பருவமெய்திய சில மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
அதை மீறினால் அது தெய்வ குற்றமாகக் கருதப்படும்,,,, இந்த கட்டுப்பாட்டினால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் 9ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நேரத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயஸ்ரீ நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் .
ஊர் கட்டுபாட்டினால் அவரது ஆசை நிறைவேறாது என சக தோழிகள் சொல்ல,,,,,,அபிநயஸ்ரீ தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு இடையில் பல பிரச்சனைகள் வந்தாலும் அதனை தனது அம்மாவின் உதவியுடன் சமாளித்து தன் கனவான டாக்டர் படிப்பை படிக்க ஆரம்பிக்கிறார் ..
கிராமத்து சாதி, சமயம், தெய்வ நம்பிக்கை பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் மீறி அபிநயஸ்ரீ நினைத்த டாக்டர் படிப்பு படித்தாரா ?

பழைய காலத்து கலாச்சாரம் என்கிற பெயரால் முடக்கப்பட்ட பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி அபிநயஸ்ரீ செயல்பாட்டினால் அந்த கிராமத்தில் மாற்றம் ஏற்பட்டதா? என்பதை முற்போக்கு சிந்தனைகளுடன் சொல்லும் இணைய தொடர் கதைதான் ‘அயலி’
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.இவரது கண்கள் அசைவின் மூலமே நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். தமிழ்செல்வியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், காலம்காலமாக கனவுகளை மறைத்து கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தால் போதும் என்று வாழ்ந்து வரும் பெண்களை பிரதிபலிக்கும்பெண்ணாக வாழ்ந்துள்ளார்.
ஆணாதிக்க சிந்தனை கொண்டவராக தமிழ்செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன்,,, வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, சிங்கம்புலி, டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி ,காயத்ரி, லவ்லின், தாரா, பிரகதீஷ்வரன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கிராமத்து மக்களாகவே கதைக்களத்திற்கேற்றபடி வாழ்ந்திருக்கிறார்கள்.
வீரபண்ணை கிராமத்தை கண் எதிரே இருக்குமளவில் நேர்த்தியான காட்சிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவாளர் ராம்ஜி,

ரேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் ,,,பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .
பெண்கள் கல்வியில் எவ்வளவு முன்னேறி இருந்தாலும்,,,,, கிராமங்களில் கலாச்சாரம்,,,, மூட பழக்க தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் மறுக்கப்படும் பெண்களின் கல்வியை முற்போக்கு சிந்தனையான சமூகக் கருத்துடன் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வசனங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனையோடு அனைவரும் பாராட்டும்படியான இத் தொடரை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்துக்குமார் .