'டாடா' - விமர்சனம் ! ரசிகர்களின் பாராட்டுதலில் மகிழும் பட குழுவினர் !!

கல்லூரியில் ஒன்றாக படித்து கொண்டிருக்கும் கவினும் அபர்ணாதாஸும் காதலித்து வரும் நேரத்தில் எல்லை மீறிய காதலால் கவினால் அபர்ணாதாஸ் கர்ப்பமாகிறார்.
ஆரம்பத்தில் கர்ப்பத்தை கலைக்க அபர்ணாதாஸை கவின் வற்புறுத்த,,,,, அதனை மறுக்கும் அபர்ணாதாஸுன் பிடிவாதத்தால் குழந்தையின் கரு வளர மாதங்கள் நகர்கின்றன ..
இந்நிலையில் இவர்களின் போக்கை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.
படிப்போடு சேர்ந்து கவின் வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தும் இருவரும் பண பிரச்சனையால் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இதனால் நண்பர்களின் வற்புறுத்தலால் சில நேரங்களில் கவின் குடித்து விட்டு வீட்டுக்கு வர இதனை அபர்ணாதாஸ் கண்டிக்கும் நிலையில்,,,,
ஒரு கட்டத்தில் கர்ப்பிணி மனைவியை வீட்டில் விட்டு கவின் வேலைக்கு சென்று விட ,,,,திடீரென ஏற்படும் பிரசவ வலியால் துடிக்கும் அபர்ணாதாஸ் கவினை மொபைலில் தொடர்பு கொள்ள,,,, அபர்ணாதாஸுன் மேல் கோபத்தில் இருக்கும் கவின் அவரின் அழைப்பை எடுக்காமல் துண்டிக்கிறார் ,,,,,,
அபர்ணாதாஸுன் அலறல் சத்தம் கேட்டு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் மருத்துவமனையில் அபர்ணாதாஸைஅனுமதிக்க குழந்தை பிறக்கிறது.
குழந்தை பிறந்ததை அறிந்துக் கொண்ட கவின், அபர்ணாதாஸை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறார்.
அங்கு குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு பெற்றோருடன் அபர்ணாதாஸ் சென்றுவிடுகிறார்.
மனம் குழம்பிய நிலையில் அதிர்ச்சியான கவின் முடிவில் பிறந்த தன் குழந்தையை எப்படி வளர்த்தார் ?
பிரிந்து சென்ற அபர்ணாதாஸுடன் மீண்டும் கவின் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'டா டா'

நாயகன் கவின் காதலன் ,,,கல்லூரி மாணவன்,,,, , அன்பான குழந்தையின் தந்தை,,,,, கணவன்,,,,, என அனைத்து பரிணாமங்களிலும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சிகளிலும் அனுபவ நடிகராக மணிகண்டன் என்ற கதாபாத்திரத்துடன் இணைந்து உடல் மொழியில் உருமாறி பார்வையாளர்களின் கைத்தட்டலுடன் இயல்பான ,,,,ரசிக்கும்படியான நடிப்பில் மிளிர்கிறார் .
கதைக்கேற்றபடி எதார்த்தமான ,,, பாராட்டும்படியான நடிப்பில் நாயகி அபர்ணாதாஸ்.,,,இறுதியில் படம் பார்க்கும் ரசிகர்களை அழ வைக்குமளவில் காட்சிகளில் இயல்பான நடிப்பு !!
கே .பாக்யராஜ் , ஐஸ்வர்யா ,வி டி வி கணேஷ் ,ஹரிஷ் ,இலன் ,பௌஸி ,கமல் , பிரதீப் என அனைத்து நடிகர்களும் தங்கள் பங்களிப்பை நடிப்பில் சிறப்பாக தந்துள்ளனர் .
எழிலரசனின் ஒளிப்பதிவும் , ஜென் மார்ட்டினின் இசையும் ,கதிரேஷ் அழகேசன் எடிட்டிங்கும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது .
கல்லூரியில் ஒன்றாக படிக்கும் காதல் ஜோடிகளின் வழக்கமான கதைதான் என ரசிகர்கள் நினைக்கும்போது பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும்படியான அழுத்தமான ,,,,, விறு விறுப்பான,,,,,, சுவாரஸ்யமான ரசிக்க வைக்கும் தெளிவான திரைக்கதையில்,,,,இயல்பான காதல் ஜோடியின் நெருக்கம், குடும்பம், மோதல், காதலர்களின் பிரிவு என அனைத்து உணர்வுபூர்வமான காட்சிகளும் கதையுடன் இணைந்து பயணிப்பதுடன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முடிவில் கை தட்டி ரசிக்கும்படி,,,, தமிழ் திரையுலகமே பாராட்டுமளவில் நல்ல தரமான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு.
ரேட்டிங் : 4 .5 / 5