top of page

‘வாத்தி’ - விமர்சனம் !எழுத்தறிவித்து இறைவனான நல்லாசிரியன் !!


கல்வியை வியாபாரமாக்கி அரசு பள்ளிகளுக்கு எதிராக அரசு பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை அதிகார ஆதிக்கத்துடன் தடுக்க திட்டம் போடுகிறார் தனியார் பள்ளிகளின் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனி


இந் நிலையில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து நடத்தும் என அறிவித்து மூன்றாம் தர ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலம் தரமற்ற கல்வியை கொடுக்க வைத்து அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள்தான் சிறந்தது என மாணவர்களின் பெற்றோர்கள் நினைப்பதற்கான வழியை சமுத்திரக்கனி வகுக்க ,,,,,


தத்தெடுக்கப்பட்ட ஆந்திர எல்லையில் உள்ள சோழவரம் அரசு பள்ளிக்கு தன் பள்ளியில் வேலை செய்யும் தனுஷை வாத்தியாராக நியமிக்கிறார் சமுத்திரகனி.


தனியார் பள்ளியில் வேலை செய்த ஆசிரியரான தனுஷ் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க,,,,, தனுஷிடம் படிக்கும் அனைத்து மாணவர்களும் படிப்பில் சிறந்த மாணவர்களாக திகழ்கின்றனர்


இதனால் கோபம் அடையும் சமுத்திரக்கனி. தொடர்ந்து தனுஷ் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை தடுக்கிறார்.


சமுத்திரக்கனியின் தடைகளையும் ,,,எதிர்ப்பையும் மீறி சாமர்த்தியமாக மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து, கல்வி கொள்ளையில் திளைக்கும் பண முதலைகளான தனியார் பள்ளி அதிபர்களின் ஆட்டத்தை அடக்கி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘வாத்தி’



நாயகனாக நடித்துள்ள தனுஷ்,,,,,, வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பள்ளி வாத்தியாராக...... சம்யுக்தாவை காதலிக்கும் காதலனாக ,,,, ஏழை மாணவர்களின் கல்விக்காக போராடும் பொது நலம் கருதும் ஆசிரியராக ,,,,,,, கதாபாத்திரத்துடன் இணைந்து வாத்தி பாலமுருகனாக படம் முழுவதும் பாராட்டும்படி இயல்பான நடிப்பில் வாழ்கிறார் !!


தனுஷுன் காதலியாக அமைதியான நடிப்பில் அழகான சம்யுக்தா....


தனியார் பள்ளி முதலாளியாக மிரட்டும் சமுத்திரக்கனி ,,, தனுஷின் அப்பாவாக ஆடுகளம் நரேன் ,,,,சாய் குமார், தணிகலபரணி, சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா, ஷாரா, ஹரிஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன்,,, கென் கருணாஸ் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !!


ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதையுடன் இணைந்த பின்னணி இசை அசத்தல் !!


யுவராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !!


கல்வியை மூலாதாரமாக வைத்து வியாபார யுக்தியுடன் பெற்றோர்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் கதையை மையமாக கொண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வெற்றி என்பது அங்கு பொது நலத்துடன் பணிபுரியும் ஆசிரியர்களினால் மட்டும்தான் என்பதை சொல்வதுடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களோடு ,,, படிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் அட்லூரி.


ரேட்டிங் : 3.5 / 5

bottom of page