‘வெள்ளிமலை’ - விமர்சனம்!

மலை கிராமமான வெள்ளிமலையில் இயற்கை மூலிகை செடிகளை கொண்டு நாட்டு வைத்தியம் பார்க்கிறார் சூப்பர் சுப்பிரமணி.
சுப்பிரமணி சிறுவனாக இருந்தபோது கால தாமதமாக செய்த வைத்தியத்தில் ஒருவர் மரணமடைகிறார் .
இந்த பிரச்சனையால் பின்னாளில் ஊரில் இருக்கும் கிராம மக்கள் நாட்டு வைத்தியர் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க மறுப்பதுடன் அவரது மூலிகை மருந்தை கிண்டல் செய்து அவரை அவமானப்படுத்துகிறார்கள்.
அதையெல்லாம் பொறுத்து கொள்ளும் சுப்பிரமணி என்றாவது ஒரு நாள் கிராம மக்கள் நாட்டு வைத்தியத்தின் அருமையை தெரிந்து கொண்டு நம்மிடம் வைத்தியம் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஊரில் தனது வைத்தியத்தை தொடர்கிறார்.
இந் நிலையில் தன் தந்தையின் மரண செய்தி கேட்டு சென்னையிலிருந்து வந்த சுப்பிரமணியின் நண்பனது மகனால் கிராம மக்கள் அனைவரும் நமைச்சலான அரிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்ட நண்பனின் மகன் சுப்பிரமணியிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துவிடுகிறார்.
இதனால், ஒட்டு மொத்த கிராம மக்களும் தங்களை காப்பாற்றுமாறு வைத்தியர் சுப்பிரமணியிடம் தஞ்சம் அடைய, அவரோ தன்னிடம் நோய்க்கான மருந்து இல்லை என்று சொல்வதோடு, மருந்து தயாரிக்கும் மூலிகை செடிகளை தேடி மலை உச்சிக்கு மக்களை அழைத்து செல்கிறார்.

அங்கு சென்றவுடன், மருந்து தயாரிக்கும் மூலிகை செடி எது என்பது எனக்கு தெரியாது என்றும், நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்தியது நான் இல்லை என மக்களை பார்த்து அதிர்ச்சியாய் சொல்ல அதிர்ந்து போன மக்கள் கோபத்தில் சுப்பிரமணியை அடிக்க முற்படுகின்றனர் !!
நமைச்சலான அரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சூப்பர் சுப்பிரமணி காப்பாற்றினாரா?
நாட்டு வைத்திய மருத்துவரான அவர் நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்தியது நான் இல்லை மக்களிடம் சொன்னதற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘வெள்ளிமலை’
கதையின் முக்கிய கதாபாத்திரமாக நாட்டு வைத்தியராக அகத்தீசன் & போகர் என இரு வேடங்களில் நடித்துள்ள சூப்பர் R.சுப்பிரமணியன் குணசித்திர நடிகராக கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் .
சூப்பர் சுப்பிரமணியனின் மகளாக நடிக்கும் படத்தின் நாயகி அஞ்சு கிருஷ்ணா மண் மணம் மாறாத கிராமத்து பெண்ணாக கதைக்கேற்றபடி நடிப்பில் எதார்த்தம் !
நாயகனாக வீர சுபாஷ் மற்றும் கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன் ,கவிராஜ், பழனிச்சாமி என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !!
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் ,,, கதைக்களத்திற்கேற்றபடி பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .

முற் காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் வழி வகுத்த நாட்டு வைத்தியத்தின் அற்புதத்தை இன்றைய மக்களுக்கு மருத்துவத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சியாக,,, இயற்கை மருத்துவ கதையுடன் மென்மையான காதலையும் கலந்து,,,,,, நடிக்கும் அனைத்து கலைஞர்களும் கதையோடு இணைந்து நடிக்க வைத்து அனைவரும் பாராட்டும்படி இயல்பாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஓம் விஜய்,
ரேட்டிங் 3 / 5