top of page

‘தக்ஸ்’ - விமர்சனம் !


பி.எல்.தேனப்பன் குமரி மாவட்டத்தில் மக்களிடம் செல்வாக்கு மிக்க மனிதராக வாழ்ந்துவரும் நிலையில் நாயகன் ஹிருது ஹாரூன் பி.எல்.தேனப்பனிடம் கணக்காளராக வேலை செய்கிறார் .


ஒரு கட்டத்தில் நாயகன் ஹிருது ஹாரூன் அனாதை இல்லத்தில் வளர்ந்து வரும் நாயகி அனஸ்வரா ராஜனை கண்டதும் அவரது அழகில் மயங்கி அவர் மீது காதல் மலர்கிறது.


இச் சூழலில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் காதலி அனஸ்வரா ராஜாவுக்குத் தொல்லை கொடுத்தவரை கொலை செய்கிறார் ஹிருது ஹாரூன்.


இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக சிறையில் அடைக்கப்படுகிறார்.



தன்னை நம்பி காத்திருக்கும் காதலி அனஸ்வரா ராஜாவுக்காக சிறையிலிருந்து தப்பித்து வெளிநாட்டிற்குப் போய்விட வேண்டும் என முடிவு செய்யும் ஹிருது ஹாரூன், தன்னை போல் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிம்ஹா, முனிஷ்காந்த் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சுரங்கப் பாதை அமைக்கிறார்


முடிவில் ஹிருது ஹாரூன் கூட்டாளிகளான சிம்ஹா, முனிஷ்காந்துடன் சேர்ந்து சிறையில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘தக்ஸ்’ படத்தின் கதை.


அறிமுக நாயகன் ஹிருது ஹாரூன் அறிமுக நடிகராக முதல் படத்தில் நடிப்பது போல இல்லாமல் காதல்,ஆக் க்ஷன், செண்டிமெண்ட் என அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் . தமிழ் திரையுலகில் சிறந்த நடிகருக்கான இடம் நிச்சயம் நாயகன் ஹிருது ஹாரூனுக்கு உண்டு .


நாயகியாக நடித்துள்ள அனஸ்வரா ராஜன் வாய் பேச முடியாதவராக வந்து இயல்பாக கண்களினாலேயே பேசி நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அமைதியான அழகில் நடிப்பில் எதார்த்தம் !


முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ஹா குற்றவாளியாக சிறைக்கு வந்ததன் காரணத்தை சொல்லும் போது மக்கள் மனதில் தனி இடத்தை பிடிக்கிறார். ஜெயில் அதிகாரியாக ஆர்.கே சுரேஷ் ,சக கைதியாக முனிஷ்காந்த்,தேனப்பன் ,அப்பாணி சரத் ,ஆல்வின் என படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் சிறப்பு !


இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், கதையின் வேகத்திற்கு இணையான மிரட்டலான பின்னணி இசை .


ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள், இரவு நேரக் காட்சிகள் , ஒரே சிறையில் சுரங்கம் தோண்டும் அறைகள் என அனைத்துமே காட்சிகளில் தரம் !!


தன் காதலியுடன் வாழ்வதற்காக கூட்டாளிகளுடன் சிறையில் இருந்து தப்பிக்க முயலும் நாயகனின் கதையை மையமாக கொண்டு விறுவிறுப்பான வேகமான திரைக்கதை அமைப்புடன் முழுக்க ஆக்‌ஷன் கலந்த கதையுடன் அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பிருந்தா !!


ரேட்டிங் - 3.5 / 5

bottom of page