top of page

“சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”  - விமர்சனம் !


இன்ஜினியரிங் படிப்பை படித்த நாயகன் சிவா உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார்.


சிங்கிளாக கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்கள் காதலிப்பதற்காக போனில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்னை செயற்கை நுண்ணறிவு கொண்ட மொபைல் போன்  ஒன்றை விஞ்ஞான வளர்ச்சியில் பல கோடி ரூபாய் செலவில்  விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா கண்டுபிடிக்கிறார்.

அந்த மொபைலுக்கு ஷாரா (மேகா ஆகாஷ்) சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார்.  


இந்த நேரத்தில் சிம்ரன் மொபைல் போனை ஷாரா வெளியே கொண்டு செல்ல அப்போது இருவர் அந்த போனை திருடி சென்று விடுகின்றனர்.


திருடியவர்கள் அந்த போனை ஒரு விலைக்கு கடையில் விற்றுவிடுகின்றனர்.


அந்த  ஸ்மார்டான சிம்ரன் மொபைல் ஒரு கட்டத்தில் சிவாவின் கைகளில் கிடைக்கிறது.  

இதனையடுத்து சிவாவின் தேவைகள் அனைத்தும் மொபைல் போன் தேவதையான சிம்ரன் பூர்த்தி செய்து வருகிறார்.


இந்நிலையில் சிம்ரன் சிவா மீது காதல் கொள்கிறாள். காதலை ஏற்க மறுக்கும் சிவா வெறும் மொபைல் போன் மூலம் இருக்கும் உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் உணர்ச்சிகளுடன் என்னுடன் வாழமுடியாது என்று கூறி சிம்ரனை காதலிக்க மறுக்கிறார்.


ஆனால் சிவாவுக்கு நாயகி அஞ்சு குரியன் மீது காதல் வருகிறது.  அதன் பின் சிவா விரும்பும் பெண்ணான அஞ்சு குரியனை இன்றைய தொழிற் நுட்பம் மூலம் சிம்ரன் சிவாவிடம் சேர்த்து வைக்கிறார்.


அந்த பெண்னை காதலிக்க தொடங்கிய பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை சிவா குறைக்கிறார். இதனால் கோபமடையும் சிம்ரன், சிவாவுக்கு எதிராக செயல்படுகிறார்.


இதனால் பல பிரச்சனையான சிக்கலில் சிக்கி கொள்ளும் சிவா அதிலிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”  ஷங்கராக  நடித்துள்ள நாயகன் சிவா வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார்.இவரின்  இயல்பான நடிப்பு , ,உடல்மொழி, வசன உச்சரிப்பு என காமெடி கலந்த கவுண்டர் டயலாக் அடித்து ரசிகர்களின் பாராட்டுதலுடன் இவரது நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.


மொபைல் போன் அழகு பாவையாக சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் , படத்தில் நடிப்பை வெளிப்படுத்த காட்சிகள் இல்லை என்றாலும் சிம்ரன் கதாப்பாத்திரத்துடன் இணைந்து மேகா ஆகாஷ் நடித்திருப்பது பாராட்டுக்குரியது .


சிவாவின் காதலியாக வரும் அஞ்சு குரியன் அமைதியான அழகில் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்.


சிவாவின் தந்தையாக வரும் பிரபல பின்னணி பாடகர் மனோ காமெடியில் திறமையான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.


ஷாரா,மா.கா.பா.ஆனந்த், திவ்யா கணேஷ், பாலா, கல்கி ராஜா, நான் கடவுள் ராஜேந்திரன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !!


இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், காமெடி கதைக்களத்திற்கான பின்னணி இசை அசத்தல் . ஆர்தர்.ஏ.வில்சன்.ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.


படம் தொடங்கும்போதே லாஜிக்கல் விஷயங்களை எதிர்பார்க்காதீர்கள் என்று டைட்டில் கார்ட் போடுவதால் படம் முழுவதும் லாஜிக் இல்லாமலே இருக்கிறது. வித்தியாசமான களத்தில் புதுமையான கதையாக விறுவிறுப்பான வேகமான முழுக்க காமெடிகலந்த திரைக்கதை அமைப்புடன் ரசிகர்கள் சிரித்து மகிழுமளவில் ரசிக்க வைத்து பொழுதுபோக்கு படமாக எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி என்,


ரேட்டிங் : 3.5 / 5bottom of page