‘அரியவன் ’ - விமர்சனம் !

கபடி வீரரான நாயகன் இஷான் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த நாயகி பிரணாலியை மனதார காதலிக்கிறார். இந்நேரத்தில் காதலியின் தோழிக்கு ஒரு பிரச்சனை வருகிறது .வில்லன் டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் கொண்டு இளம் பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி படுக்கையில் அந்த பெண்களின் அந்தரங்கத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார் .
இந்நிலையில் டேனியல் பாலாஜியிடமிருந்து தன் தோழியையும் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் காப்பாற்ற காதலன் இஷானின் உதவியை நாயகி பிரணாலி கேட்கிறார் .
பிரணாலியின் வேண்டுகோளால் தோழிடன் சேர்ந்து அனைவரையும் இஷான் காப்பாற்றும் முயற்சியில் இறங்கும்போது டேனியல் பாலாஜியின் அரசியல் பலமும் ,,பண பலமும் சேர்ந்த செல்வாக்கு மிக்க மனிதராக இருக்கும் அதிர்ச்சிகரமான பின்னணி தெரிய வருகிறது.
ஆபாசமாக வீடியோக்களையும் அனைத்து பெண்களையும் காப்பாற்ற களத்தில் இறங்கும் நாயகன் இஷான் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘அரியவன்’
நாயகன் இஷான் இயல்பான நடிப்பில் காதல், ,கபடி, சென்டிமென்ட் குறிப்பாக வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவாக சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
நாயகி பிரணாலிக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். அழகான காதல் காட்சிகளுடன் திறமையான நடிப்பின் மூலம் அனைவரையும் கவனிக்க வைக்கிறார் .
ஸ்டைலிஷ் வில்லனாக வரும் டேனியல் பாலாஜி நடிப்பில் மிரட்டுகிறார் .
சத்யன், ரமா , கல்கி, சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள்சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவில் . ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் சூப்பர் !!
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்களும் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்ற சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் விறு விறுப்பாக வேகமான திரைக்கதை அமைப்புடன் ,பேஸ் புக் வாட்ஸ் அப் என சமூக வலை தளங்களில் முழு நேரமும் வலம் வரும் பெண்களுக்கு எச்சரிக்கையாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியுடன் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்மித்ரன் ஆர்.ஜவஹர்,
ரேட்டிங் : 3.5 / 5