top of page

‘கொன்றால் பாவம்’ - விமர்சனம் !


நிறை மாத கர்ப்பிணி பெண்களுக்கு தன் வீட்டிலேயே மகள் வரலட்சுமி சரத்குமாருடன் பிரசவம் பார்க்கும் ஈஸ்வரி ராவ்,, கணவன் சார்லியோடு அளவுக்கு அதிகமான வறுமையுடனும் பண கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறார் .


இந் நேரத்தில் வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப் தங்க இடமில்லாமல் இவர்களது வீட்டில் ஒரு இரவு தங்கிவிட்டு செல்ல அனுமதி கேட்கிறார். மூவரும் அதற்கு சம்மதிக்கிறார்கள்.


இந் நிலையில் சந்தோஷ் பிரதாப் வைத்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தின் மீது ஆசை கொண்ட வரலட்சுமிசரத்குமார் அவற்றை அபகரிக்க முடிவு செய்கிறார்.


அதன் பின் தன் பெற்றோர்களான சார்லி ஈஸ்வரி ராவ் ஆகியோரது ஒப்புதலுடன் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்ய திட்டமிடுகிறார் வரலட்சுமிசரத்குமார் .


பணம் மற்றும் நகைகள் மீது பேராசை கொண்ட வரலட்சுமிசரத்குமார் திட்டமிட்டபடி சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தாரா ?


சார்லி - ஈஸ்வரி ராவ் வாழும் வீட்டில் ஒரு இரவு தங்கிவிட்டு செல்ல அனுமதி கேட்கும் சந்தோஷ் பிரதாப் யார் ? எதற்காக அவர் அங்கு வந்து தங்குகிறார் ?என்பதை சொல்லும் படம் தான் ‘கொன்றால் பாவம்’


கதையின் நாயகியாக மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், திருமண வயதை கடந்து வறுமையான வாழ்க்கையுடன் வாழும் தன் நிலையை இயல்பான நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் .


கதையின் நாயகனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .


குணசித்திர நடிப்பில் சார்லி ,,, தாயுள்ளம் கொண்டவராக நடித்துள்ள ஈஸ்வரி ராவ் பார்வையற்றவராக நடித்திருக்கும் செண்ட்ராயன், மீசை ராஜேந்திரன், மனோ பாலா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !


ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவும் ,,,இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் !


ஒரு பெண்ணின் பேராசையால் ஏற்படும் விபரீதம் இந்த எளிமையான கதை கருவை மையமாக கொண்டு ஒரு இரவில் நடைபெறும் கதையாக,, நேர்த்தியான வசனங்களுடனும் ,,, வேகமான திரைக்கதை அமைப்புடனும்,,, முடிவில் எதிர்பாராத திருப்பு முனையாக சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்திலும் அனைவரும் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.



ரேட்டிங் ; 3 / 5




bottom of page