'அகிலன் ' - விமர்சனம் !

துறைமுகத்தில் சட்டவிரோதமாக நடக்கும் கடத்தல்களுக்கு அங்கு பணியாற்றும் அதிகாரிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு முக்கிய புள்ளியாக செயல்படுபவர் ஹரிஷ் பெராடி. அவருக்கு அடியாளாக இருந்து அவர் சொல்லும் வேலைகளை கச்சிதமாக செய்து முடிப்பவர் ஜெயம் ரவி.
ஒட்டு மொத்த துறைமுகத்தையும் ராஜாவாக ஆள நினைக்கும் ஜெயம் ரவி. தலைவனாக இருக்கும் மிக பெரிய தாதாவான தருண் அரோராவை சந்திக்க முயற்சி செய்கிறார்.
இதனால் துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும் ஜெயம் ரவிக்கும், ஹரிஷ் பெராடிக்கும் மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் தருண் அரோரா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பல நாடுகளில் உளவு செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பை பிரச்சனைகளுக்கு பயந்து ஹரிஷ் பெராடி மறுக்கும் நேரத்தில்,,,, உளவாளியை கடத்தும் வேலையை தருண் அரோரா உத்தரவின் பேரில் ஜெயம் ரவியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மற்றொரு பக்கம் அதிரடி போலீஸ் அதிகாரியான ஜிரக் ஜானி ஜெயம் ரவியை கைது செய்ய தீவிர முயற்சியில் இருக்கிறார்.
முடிவில் தருண் அரோரா சொன்னபடி உளவாளியை கடத்தும் பொறுப்பை ஏற்ற ஜெயம் ரவி அதில் வெற்றி பெற்றாரா ?
போலீஸ் அதிகாரி ஜிரக் ஜானி வலையில் ஜெயம் ரவி சிக்கினாரா ?
எதற்காக ஜெயம் ரவி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'அகிலன்'
துறைமுக பணியாளனாக கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயம் ரவி மாறுபட்ட இயல்பான உடல் மொழியில் 'அகிலன்' கதாபாத்திரமாக உணர்வுப்பூர்வமான நடிப்பில் மிளிர்கிறார் !!
எதார்த்த நடிப்பில் போலீஸாக ஜெயம் ரவியின் காதலியாக வரும் பிரியா பவானி சங்கர்.
அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஜிரக் ஜானி . மிரட்டும் வில்லன்களாக ஹரிஷ் பெராடி, தருண் அரோரா. சங்க தலைவனாக மதுசூதனன், தன்யா ரவிசந்திரன் ,ஹரிஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையும் ,ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
துறைமுகத்தில் நடைபெறும் கடல் வழி சரக்கு போக்குவரத்தை கதைக்களமாக கொண்டு தாதாக்களின் கட்டுப்பாட்டில் கடத்தல் சரக்கு கடல்வழி போக்குவரத்து வழியில் உலக தரத்தில் நடைபெறுவதை வெளிப்படையாக சொல்வதுடன் ,,, வழக்கமான ஜெயம் ரவியை இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விறு விறுப்பான திரைக்கதையில் அதிரடி ஆக்க்ஷனுடன் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.
ரேட்டிங் ; 3. 5 / 5