top of page

'இட்டர்னல்ஸ்' விமர்சனம்


மனித இனத்தை காப்பாற்றுவதற்காக டிவியண்ட்ஸ் என்ற மிக கொடூர குணம் கொண்ட மிருகங்களை அழிப்பதற்காக இட்டர்னல்ஸ் எனப்படும் பத்து சூப்பர் ஹீரோக்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்படுகின்றனர். இந்த சூப்பர் ஹீரோக்கள் அனைவருக்கும் தனி தனி சக்தி இருப்பதால் இவர்களுக்கு வயதும் ஆகாது, இவர்களை கொல்லவும் முடியாது.



உலகில் இருக்கின்ற கொடூர குணம் கொண்ட மிருகங்களான அத்தனை டிவியண்ட்ஸ்களையும் 10 சூப்பர் ஹீரோக்களும் போராடி அழிக்கிறார்கள் .


இந்நிலையில் பலம் வாய்ந்த சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதே 10 சூப்பர் ஹீரோக்களின் சக்தியை அபகரித்து கொண்டு ஒவ்வொரு ஹீரோவையும் அழிக்கிறது.

ஹீரோக்களால் அழிக்கப்பட்ட சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் எப்படி மீண்டும் வந்தது ?

தங்களை அழிக்க வரும் கொடூர குணம் கொண்ட மிருகமான டிவியண்ட்ஸ்ஐ 10 சூப்பர் ஹீரோக்கள் மீண்டும் அழித்தார்களா ? என்ற கேள்விக்கு விடையளிக்கும் படம்தான் 'இட்டர்னல்ஸ்'



கிட் ஹரிங்டன்,ஏஞ்சலினா ஜூலி, ஜெம்மா சான், ரிச்சர்ட் மடடேன், குமைல் நஞ்சினி, லியா மேக்ஹுக், டான் லீ, லாரன் ரிட்லோஆஃ , ஹரிஷ் படேல், பாரி கியோகன் என நடிப்பில் இவர்களது பங்களிப்பு சிறப்பு!

இசையமைப்பாளர் ராமின் டிஜவாடி பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் பென் டேவிஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் !

காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தாலும் திரைக்கதையின் வேக தடையால் ஜனரஞ்சகமாக இல்லாமல் கதைதான் முக்கியம் என 'இட்டர்னல்ஸ்' இயக்கியுள்ளார் இயக்குனர் சோலி ஜாவோ.



bottom of page