’ டி 3 ' -- விமர்சனம் !

குற்றாலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்யும் நாயகன் பிரஜின் அவரது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மர்மமான முறையில், இளம் பெண் ஒருவர் லாரி விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.
இதை விசாரிக்கும் பிரஜினுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. மர்மமான உயிரிழப்புகள், தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.
இந்நிலையில் மர்ம வழக்குகளை விசாரிக்கும் அதிகாரி பிரஜினின் மனைவி மர்மமான முறையில் கொல்லப்பட, பிரஜின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இறுதியில் நாயகன் பிரஜின் குற்றங்களுக்கான பின்னணியைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் ’டி 3 ' கதை.
கம்பிரமான மிடுக்கான தோற்றத்தில் காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பிரஜின்.
உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போராடுவது, மனைவி மரணத்தைக் கண்டு அலறுவது.. என கதாபாத்திரத்துடன் இணைந்து ரசிகர்கள் பாராட்டும்படி நடித்திருப்பது சிறப்பு !
இயல்பான நடிப்பில் பிரஜின் ஜோடியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப்
மருத்துவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகுல்மாதவ், பணி ஓய்வு பெற இருக்கும் காவலராக நடித்திருக்கும் சார்லி, காயத்ரி யுவராஜ், மேத்யூ வர்கீஸ் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
படத்திற்கு பக்க பலமாக ஸ்ரீஜித் எடவானாவின் பாடல்களும், பின்னணி இசையும்!
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !
ஓரே நாளில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லர் கதையை விறு விறுப்பான திரைக்கதையுடன் முடிவில் எதிர்பாராத திருப்புமுனையான கிளைமாஸ்க்குடன் சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் திரில்லர் பட ரசிகர்கள் ரசிக்கும்படிஇப் படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் S.பாலாஜி
ரேட்டிங் ; 3 / 5