top of page

'‘கப்ஜா '’ - விமர்சனம் !


பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார்.


தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மகனான உபேந்திரா தன் தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வேறொரு நகரமான அமரேஸ்வரம் என்ற ஊரில் வசித்து வருகிறார்.

பின்னாளில் வளர்ந்து விமானப்படை விமானியாக மாறும் உபேந்திரா சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரேயாவை காதலித்து வருகிறார்.


ஒரு கட்டத்தில் உபேந்திராவின் சகோதரர் மாஃபியா டான்களால் கொல்லப்படுகிறார்.


தனது அண்ணனின் கொடூரமான கொலைக்கு பழி தீர்க்க உபேந்திரா களத்தில் இறங்க,,,,, இந்தியாவே மிரளும் நிகழ் உலக தாதாவாக மாறுகிறார் உபேந்திரா.


இச் சூழ்நிலையில் ஸ்ரேயாவின் தந்தை முரளியின் விருப்பமில்லாமல் ராஜ பாரம்பரிய கலாச்சாரத்தை மீறி நாயகி ஸ்ரேயாவை திருமணம் செய்கிறார்.


ஸ்ரேயாவின் தந்தை முரளி அரசாங்க அளவில் தனது செல்வாக்கை உபயோகப்படுத்தி உபேந்திராவை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்.


முடிவில் ஸ்ரேயாவின் தந்தை முரளியின் கொலை முயற்சியில் இருந்து உபேந்திரா தப்பித்தாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பிரம்மாண்ட ஆக்க்ஷன் காட்சிகளுடன் சொல்லும் படம்தான் '‘கப்ஜா'’


நாயகன் உபேந்திரா ஆர்கேஷ்வரன் என்ற வேடத்தில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் தனித்துவமிக்க ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற உபேந்திரா மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.


நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா அற்புதமான நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்கிறார்.


சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் வரும் காட்சிகள் மனதில் நிற்கிறது.


படத்தில் ஏகப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்றபடி மிரட்டலாக நடித்திருக்கிறார்கள்.


கே.ஜி.எஃப்’ படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் வேகத்திற்கு இணையான மிரட்டல் !!


ஒளிப்பதிவாளர் ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம் !!


கேஜிஃப் பட வரிசையில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த பக்கா மாஸான காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாக பிரமாண்டமாக காட்சிகளை படமாக்கிய விதத்திலும் ஆக்‌ஷன் பட ரசிகர்கள் பாராட்டும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சந்துரு.


ரேட்டிங் ; 3.5 / 5

bottom of page