' கோஸ்டி' - விமர்சனம் !

இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் தந்தை போலீஸ் அதிகாரி ரகுவரனால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் திடீரென சிறையிலிருந்து தப்பி,,,, தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலைசெய்யதிட்டமிடுகிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் திட்டத்தை அறிந்த காஜல் அகர்வால் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
மற்றொரு பக்கம் காஜல் அகர்வால் செல்லும் இடமெல்லாம் அவரை பின் தொடரும் பேய்கள் காமெடித்தனமாக பயமுறுத்த அதனிடம் இருந்து தப்பிக்க ஆடு களம் நரேன் ,மனோ பாலா ,ராதிகா சரத்குமார் என பேய் விரட்டும் சாமியார்களை வரவழைத்து பேய்யை விரட்ட போராடுகிறார் .
முடிவில் கொலை செய்ய முயற்சி செய்யும் கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை காஜல் அகர்வால் காப்பாற்றினாரா ?
தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வந்த பேய்களை வீட்டிலிருந்து விரட்டினாரா ?
அவரை பயமுறுத்தும் பேய்கள் யார்? என்பதை காமெடியாக சொல்லும் படம்தான் 'கோஸ்டி'
நாயகியாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள காஜல் அகர்வால் முழுக்க காமெடியை மையமாக கொண்ட படம் என்பதால் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !
யோகி பாபு, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி மூவர் கூட்டணி நடத்தும் காமெடி ரகளையில் ரசிகர்களின் சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது !
மிரட்டும் காமெடி வில்லனாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ,சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெய் ,ஒரே காட்சியில் மந்திரவாதியாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி, , ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
கதையுடன் பயணிக்கும் காமெடி காட்சிகளுடன் படம் பார்க்க வரும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் காமெடி கலாட்டாவாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கல்யாண் .
ரேட்டிங் ; 3 / 5