top of page

’விடுதலை - பாகம் 1’ - விமர்சனம்!

Updated: Apr 1


வெளிநாட்டை சேர்ந்த சுரங்க நிறுவனத்திற்காக பழங்குடி மக்கள் வாழும் அருமபுரி என்ற மலையை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது.


இதனால் மலை வாழ் கிராமத்து மக்கள் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராட தொடங்குகின்றனர்.


அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 'மக்கள் படை' என்கிற தீவிரவாத அமைப்பு பாலத்தில் குண்டு வைத்து ரயிலை தகர்க்கிறது.


அந்த தீவிரவாத அமைப்பு இருக்கும் வரை சுரங்க நிறுவனம் தொடங்க முடியாது என்பதால் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய மக்கள் படையை தீவிரவாத அமைப்பாக அரசு அறிவிக்கிறது .


அதன் பின்னர் மலைப்பகுதியில் 'தமிழ்நாடு காவல்துறை' முகாம் அமைத்து மக்கள் படையினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது.


இந் நிலையில் பணி நியமனத்தில் வரும் சூரி மக்கள் படை தலைவரை பிடிக்கும் காவல் துறை முகாமில் ஜீப் டிரைவராக நியமிக்கப்படுகிறார்.


மக்கள் படையின் புரட்சியை தடுக்கவும் இந்த அமைப்பின் தலைவரான மக்கள் போராளியான விஜய் சேதுபதியை பிடிக்கவும் போலீஸ் ‘ஆப்ரேஷன் கோஸ்ட் ஹண்ட்’ என்ற தேடுதல் வேட்டையை தொடங்குகிறது.


இதற்கிடையே ஜீவ காருண்ய வள்ளலார் பக்தரான சூரி பணியில் இருக்கும்போது உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற ,,,, அதனால் உயர் அதிகாரி சேத்தனின் கோபத்திற்கு ஆளாகி துறை ரீதியாக தண்டிக்கப்படுகிறார்.


இந் நேரத்தில் ஆபரேஷன் கோஸ்ட் திட்டத்தின் தலைவராக டிஎஸ்பி கெளதம் மேனன் நியமிக்கப்படுகிறார்.


அவரது விசாரணையில் யாருமே பார்க்காத மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதியின் உருவம் வெளி உலகத்திற்கு தெரிகிறது .


இதற்கிடையில் அந்த கிராமத்தில் வசிக்கும் பவானி ஸ்ரீயை காதலிக்கிறார் சூரி .


மக்கள் படையின் போராளியாக இருக்கும் விஜய் சேதுபதியை பிடிக்க போலீஸின் கெடுபிடி அதிகமாக ,,,, மக்கள் படைக்கும், காவல் படைக்கும் இடையிலான மோதலால் போலீசார் இறக்கும் சம்பவங்கள் அதிகரிக்கிறது.


இதனால் கோபத்தின் உச்சத்தில்..... ஆண்கள், பெண்கள் என கிராம மக்களை விசாரணை என்ற பெயரில் நிர்வாணமாக சித்ரவதை செய்து அடியால் பின்னியெடுக்கிறது போலீஸ் .


தன் காதலியான பவானி ஸ்ரீ கூட்டத்தில் ஒருவராக போலீசிடம் அடி வாங்குவதை பார்த்து கலங்கும் சூரி, பவானி ஸ்ரீயையும் அடி வாங்கும் மக்களையும் காப்பாற்ற மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதி கிராமத்தில் இருக்கும் இடத்தை உயர் அதிகாரியிடம் தெரிவிக்கிறார் .


சூரி தெரிவித்த தகவலால் போலீஸ் தனி படையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இடத்தை நோக்கி விரைகிறது .


முடிவில் போலீஸ் விஜய் சேதுபதியை கண்டுபிடித்து கைது செய்தார்களா ?

போலீஸிடம் சித்ரவதைபடும் பவானிஸ்ரீயை சூரி காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'விடுதலை'


ஒருவரது உயிரை காப்பாற்ற உதவி செய்ததில் உயர் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்காமல் கொடுக்கும் தண்டனையை ஏற்று கொள்ளும் காட்சிகளிலும்,

போலீசின் அராஜகத்தில் காதலியுடன் சேர்ந்து கூட்டத்தில் சிக்கி சீரழியும் பெண்களை காப்பாற்ற உயர் அதிகாரிகளிடம் போராடும் காட்சிகளிலும் ,, போலீஸ் படையுடன் சேர்ந்து விஜய் சேதுபதியை பிடிக்க வீட்டின் கூரை மீது விழுந்து எழும் காட்சிகளிலும் ரசிகர்கள் கை தட்டி ரசிக்குமளவில் பாராட்டும்படியான நடிப்பில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கதாபாத்திரத்துடன் இணைந்து படம் முழுவதும் வாழ்கிறார் கதையின் நாயகனாக வரும் சூரி


முக்கிய கதாபாத்திரமாக மக்கள் படை தலைவர் வாத்தியாராக நடித்துள்ள விஜய் சேதுபதி . மக்களின் வாழ்வாதாரத்திற்காக அரசை எதிர்த்து போராடுவதை இயல்பான வசனங்களால் பேசும் காட்சிகளில் கை தட்டலுடன் தியேட்டரில் விசில் பறக்கிறது.


நாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ பழங்குடி இன பெண்ணாக இயல்பான நடிப்பில் ரசிக்க வைக்கிறார் !


டி.எஸ்.பியாக இயக்குநர் கெளதம் மேனன், அமைச்சராக இளவரசு,தலைமை செயலாளராக ராஜீவ் மேனன், காவல் படை அதிகாரியாக சேத்தன், போலீஸ் அதிகாரியாக இயக்குநர் தமிழ், மூணாறு ரமேஷ் ,சரவண சுப்பையா என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் மிரள வைக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கும் மலையின் அழகு !

பாடல்களுடன் , மிரட்டலான பின்னணி இசையுடன் இசை தாண்டவமாடுகிறார் இசைஞானி இளையராஜா .


'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் போராளிகளின் வாழ்வியலை எதார்த்தமாக சொல்வதுடன் ,,, விசாரணையின் பேரில் மக்களை அடித்து சித்ரவதை செய்யும் போலீசின் அராஜகத்தை தோலுரிப்பதுடன்,, அழுத்தமான,,வலுவான திரைக்கதை அமைப்பில் ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் கதையாக ஒவ்வொரு காட்சியையும் மிக கவனமாக நேர்த்தியாக காட்சிப்படுத்திய விதத்திலும் தமிழ் திரையுலகம் பாராட்டும் சிறந்த இயக்குனராக இப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்


ரேட்டிங் ; 3.5 / 5


bottom of page