top of page

'யானை முகத்தான்' - விமர்சனம் !


ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் தீவிர விநாயகர் பக்தரான ரமேஷ் திலக் ஊர்வசியின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார் .ஊரெல்லாம் கடன் வாங்கி சாமார்த்தியமாக எந்த பிரச்சினை வந்தாலும் விநாயகர்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று தினமும் ஒரு கோரிக்கையோடு விநாயகரை வேண்டி வருகிறார்.


ஒரு நாள் ரமேஷ் திலக்கிற்கு கோயில்களில் ,வீட்டில் உள்ள விநாயகர் சிலை காலண்டரில் உள்ள விநாயகர் புகைப்படம் ''என எதுவும் இவரது கண்களுக்கு தெரியாமல் போகிறது.


ஏன் ரமேஷ் திலக்கின் கண்களுக்கு விநாயகர் புகைப்படங்கள் தெரியவில்லை ? இதனால் குழப்பமாகும் ரமேஷ் திலக்கிற்கு முடிவில் என்ன நடந்தது ? என்பதை சொல்லும் படம்தான் 'யானை முகத்தான்'


படத்தின் நாயகனான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரமேஷ் திலக் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

கடவுள் விநாயகராக வரும் யோகிபாபு காட்சிகளுக்கு இடையிடையே திரையில் தோன்றினாலும் காமெடியிலும் , பேசும் வசனங்களிலும் தன் பங்கை நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்.

இயல்பான நடிப்பில் ஊர்வசியும் , கருணாகரனும் !


கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் கதைக்கேற்றபடி அமைத்துள்ளது !


கடவுளை நம்பினோர் நல்லது நினைத்தால் அந்த கடவுள் கை விட மாட்டார் என்ற கருத்தை மையமாக கொண்ட கதையுடன் முன்னணி காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் நகைச்சுவைக்கு பஞ்சமான திரைக்கதை அமைப்புடன் மக்களுக்கு நல்ல கருத்தை நகைச்சுவையான கதையுடன் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா!


ரேட்டிங் : 3 / 5

bottom of page