'பொன்னியின் செல்வன் 2' - விமர்சனம் !
Updated: Apr 30


அருண்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் கடலில் முழ்கி இறப்பதை போன்ற காட்சியுடன் முதல் பாகம் முடிவடையும்
இவர்கள் இருவரும் கடலில் மூழ்கி இறந்த செய்தி தஞ்சை பேரரசுக்கு தெரிகிறது .
சோழ மன்னரான சுந்தர சோழனும் குந்தவையும் இச் செய்தி கேட்டு அதிர்ச்சியடையடைகின்றனர் .
இந்நிலையில் கடலில் சிக்கிய இருவரது உயிரையும் ஊமை ராணி என்ற வயது முதிர்ந்த பெண் காப்பாற்றுகிறார்.
அருண்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் உயிருடன் இருப்பதை தெரிந்து கொண்ட குந்தவை அவர்களை காப்பாற்றிய ஊமை ராணி யார் என்ற உண்மையை தனது தந்தை சுந்தர சோழரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள முற்படுகிறார் .
இந்நேரத்தில் சித்திரை பௌர்ணமியன்று ஆதித்த கரிகாலனோடு அருண்மொழி வர்மனையும் ,சுந்தர சோழனையும் கொல்ல நந்தினியுடன் சேர்ந்து சபதம் செய்கிறார் ரவி தாசன்
ஒரு கட்டத்தில் பெரிய பழுவேட்டரையரின் ஆணைப்படி சிற்றரசர்களின் சதியால் சோழ ராஜ்ஜியத்தில் மன்னராக முடிசூட மதுராந்தகன் சிவனடியார்கள் படையுடன் சேர்ந்து சோழ பேரரசை எதிர்த்து போர் புரிய நினைக்கிறார் .


ஆதித்த கரிகாலனை பழிவாங்க அவரை தனியே சந்திக்க கடம்பூருக்கு வரவழைக்க திட்டம் தீட்டுகிறார் நந்தினி.
இதற்கிடையில் தன் கட்டளையை ஏற்று அருண்மொழி வர்மனை அழைத்து வந்த வந்தியத்தேவனை மனதார காதலிக்கிறார் குந்தவை.
தன்னை கொல்ல முற்படும் முன்னாள் காதலியான நந்தினியை சந்திக்க எவர் துணையில்லாமல் தனியாக கடம்பூருக்கு செல்கிறார் ஆதித்த கரிகாலன் .
மற்றொரு பக்கம் சிகிச்சை பலனில் உயிர் பிழைத்த அருண்மொழி வர்மனை கொலை செய்ய நந்தினியின் ஆட்கள் போராடுகின்றனர் .
முடிவில்,,,,,,,,பழி வாங்க துடித்த நந்தினி தன்னை சந்திக்க வரும் ஆதித்த கரிகாலனை என்ன செய்தார் ?
தன்னை கொல்ல வந்த எதிரிகளிடம் இருந்து அருண்மொழி வர்மன் தப்பித்தாரா?
அருண்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் கடலில் முழ்கிய போது அவர்களை காப்பாற்றிய ஊமை ராணி யார் ?
சோழ ராஜ்ஜியத்தின் மன்னராக முடிசூட நினைத்த மதுராந்தகனின் ஆசை நிறைவேறியதா ? என்பதை சொல்லும் படம்தான் 'பொன்னியின் செல்வன் 2 '
சீயான் விக்ரம் ,,, குணசித்திர நடிகராக இறுதியில் ஐஸ்வர்யா ராயை சந்திக்கும் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பில் ஆதித்த கரிகாலனாகவே ரசிகர்கள் மனதில் படம் முழுவதும் வாழ்கிறார் !


ஜெயம் ரவி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான அருண்மொழி வர்மனாக ,,, ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக,, முடிவில் கம்பிரமான உடை அலங்காரத்தில் பொன்னியின் செல்வனாக இயல்பான நடிப்பில் பாராட்டும்படி நடித்திருக்கிறார் .
காதல் , ஆக்க்ஷன் ,செண்டிமெண்ட் என கதைக்கு பக்க பலமாக வந்திய தேவனாக கார்த்தி பல பரிணாம நடிப்பில் திரைக்கதையின் நாயகனாக ஜொலிக்கிறார் .
அமைதியான நடிப்பில் பழிவாங்க துடிக்கும் பெண்ணாக நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ,,,
திரையில் அழகில் மிரட்டும் குந்தவையாக திரிஷா,,,மற்றும் ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா, சரத்குமார் ,பார்த்திபன் , பிரகாஷ்ராஜ் ,ஜெயசித்ரா ,இளைய திலகம் பிரபு , விக்ரம் பிரபு , ஜெயராம் ,லால் ,கிஷோர் ,ரஹ்மான் ,ரியாஸ்கான் என படத்தில் நடித்த அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
கதைகளத்தில் ரசிகர்களே பயணிக்குமளவில் ரவிவர்மனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
பொன்னியின் செல்வனின் மற்றொரு நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ,,, கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையும் ,, ரசிக்க வைக்கும் பாடல்களும் ,,,, அசத்தலான மிரட்டல் !


தெளிவான திரைக்கதைஅமைப்பில் கல்கியின் புகழ்பெற்ற'பொன்னியின் செல்வன்' நாவலை அழகுப்படுத்தி நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து தமிழ் திரையுலகமே பாராட்டும்படி வரலாற்று பின்னணியின் வேகத்துடன் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் சிறந்த சரித்திர படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
சரித்திர புகழ் பெற்ற இவ் நாவலை தமிழர்கள் பெருமைப்படும்படி பிரம்மாண்டமாக தயாரித்த தயாரிப்பாளர் 'லைகா' சுபாஸ்கரன் அவர்களை மனதார பாராட்டலாம் !!
ரேட்டிங் ; 4. 5 / 5