'தீர்க்கதரிசி' - விமர்சனம் !


'காவல் துறை உங்கள் நண்பன்' என்கிற காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் ஸ்ரீமன் வேலை செய்து வருகிறார் . கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு சென்னையில் நடக்க இருக்கும் சில குற்றச் சம்பவங்களை முன் கூட்டியே சொல்லி அதனை தடுக்குமாறு கூறுகிறார்.
ஆரம்பத்தில் அவர் சொல்வதை அலட்சியப்படுத்தும் காவல் துறையினர் அவர் சொல்வதுபடி குற்றச் செயல்கள் நடப்பதை கண்டு அதிர்கின்றனர்.
இதைப்பற்றி விசாரிக்க காவல் அதிகாரி அஜ்மலை மேலிடம் நியமிக்கிறது . .
தீவிர விசாரணையில் ஈடுபடும் அஜ்மலின் குழுவால் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபரை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அதேபோல் அந்த மர்ம நபர் செய்தி ஊடகத்திற்கும் இந்த தகவலை சொல்கிறார். அந்த நபரை பொதுமக்கள் 'தீர்க்கதரிசி' என்ற அழைக்கின்றனர்.
காவல் துறையின் அலட்சியப்போக்கை ஊடகத்தினர் பிரேக்கிங் செய்தியாக வெளியில் சொல்ல திணறுகிறது காவல் துறை .
மறுபுறம் பொது மக்கள் யார் இந்த 'தீர்க்கதரிசி' என்ற குழப்பத்தில் இருக்க,,,,
அடிக்கடி காவல் துறைக்கு போனில் தொடர்பு கொண்டு நடக்க இருக்கும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே சொல்லும் அந்த மர்ம மனிதன் யார் ? '
'தீர்க்கதரிசி' என மக்களால் அழைக்கப்படும் அந்த மர்ம மனிதனை முடிவில் காவல் துறையினர் கண்டுபிடித்தார்களா ? என்பதை சொல்லும் படம்தான் 'தீர்க்கதரிசி'
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ் உணர்பூர்வமான நடிப்பின் மூலம் அனுபவ நடிகராக அழுத்தமான குணசித்திர நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.


காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல், ஸ்ரீமன் ,துஷ்யந்த் ,ஜெய்வந்த்,ஒய் ஜி மகேந்திரா, தேவதர்ஷினி , பூர்ணிமா பாக்யராஜ் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் !!
இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியனின் இசையும்,,, லக்ஷ்மனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !!
நடக்க இருக்கும் குற்ற சம்பவங்களை முன்கூட்டியே காவல் துறைக்கு தெரிவிக்கும் தீர்க்கதரிசி,,,,அதனால் தீவிர விசாரணையில் ஈடுபடும் காவல் துறை இந்த கதையின் அடிப்படையில் விறு விறுப்பான ,,, வேகமான படத்தின் தயாரிப்பாளர் பி.சதிஷ்குமார் திரைக்கதை அமைப்பில்,,,கிளைமாஸ்க்கில் யாரும் எதிர்பாராத திருப்பு முனையான காட்சியுடன் சஸ்பென்ஸ் க்ரைம் கலந்த படமாக இப் படத்தை இயக்கியுள்ளார்கள் இயக்குனர்கள்
பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டி.
சொல்ல வந்த கதையில் சத்யராஜ் கதையினை சிலமணி நேரத்தில் முடிக்காமல் திரைக்கதையில் காட்சிகளை கொஞ்சம் விரிவுபடுத்தியிருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும்.
ரேட்டிங் ; 3 / 5