'என்ன சொல்ல போகிறாய்' விமர்சனம்

ரேடியோ மிர்ச்சியில் ஜாக்கியாக வேலை பார்க்கும் அஸ்வின் கதை எழுதும் எழுத்தாளர் அவந்திகா மிஷ்ராவை திருமணம் செய்து கொள்ள தன் தந்தையுடன் பெண் பார்க்க செல்ல ,
வருங்கால கணவராக போகும் அஸ்வினிடம் தனியாக பேச வேண்டும் என பெற்றோர் அனுமதியுடன் வெளியில் அழைத்து செய்கிறார் அவந்திகா மிஷ்ரா.
உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா என அஸ்வினிடம் அவந்திகா மிஷ்ரா கேட்க ,
அழகான பெண்ணை காதலித்த கதையை கற்பனை கலந்து அந்த பெண்ணின் அழகை வர்ணித்து அவந்திகா மிஷ்ரா ரசிக்கும் விதமாக தன் காதல் கதையை சொல்கிறார் அஸ்வின் .
இந்நிலையில் உங்க பழைய காதலியை பார்க்க வேண்டும் என அவந்திகா மிஷ்ரா அஸ்வினிடம் சொல்ல குழப்பமடையும் அஸ்வின் நண்பன் புகழிடம் தன் நிலைமையை சொல்ல காதலியாக நடிக்க தேஜ் அஸ்வினி இருவரும் சந்திக்கின்றனர் .
ஒரு ஒப்பந்தத்துடன் அவரும் காதலியாக நடிக்க சம்மதிக்கிறார் .
தான் சொன்ன கதையில் வரும் அழகான பெண்ணை போல இருக்கும் தேஜ் அஸ்வினியை பார்த்ததும் அவரது அழகில் மயங்கும் !
அஸ்வின் திருமணம் செய்து கொள்ள போகும்அவந்திகா மிஷ்ராவிடம் தேஜ் அஸ்வினியை அறிமுகப்படுத்துகிறார் .
நாளடைவில் மூவரும் அடிக்கடி சந்தித்து கொள்ளும் நிலையில் தேஜ் அஸ்வினியை தீவிரமாக காதலிக்கிறார் அஸ்வின் .
ஒரு கட்டத்தில் அவரது காதலை ஏற்க மறுக்கும் தேஜ் அஸ்வினி,
அவந்திகா மிஷ்ராவிற்கும் ,அஸ்வினுக்கும் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்க இருக்கும் நிலையில்,
அஸ்வின் காதலை ஏற்று கொண்டு அவர் மீது காதல் கொள்கிறார் !!
அஸ்வினுக்கும் அவந்திகா மிஷ்ராவிற்கும் நிச்சயிக்கப்பட்டதிருமணம் நடந்ததா ?
அஸ்வின் மீது காதல் கொண்ட தேஜ் அஸ்வினியின் நிலை என்ன?
என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் 'என்ன சொல்ல போகிறாய்'
இன்றைய இளைய தலைமுறையின் நாயகனாக அஸ்வின் நடிப்பு இளமை துடிப்புடன் உள்ளது ,
நாயகிகளான அழகான தேஜ் அஸ்வினி ,அவந்திகா மிஷ்ரா இருவருமே நடிப்பில் சிறப்பாக செய்துள்ளனர்.
புகழ் ,டெல்லி கணேஷ் ,சுப்பு பஞ்சு ,ஸ்வாமிநாதன் ,ஹரிப்ரியா ,TM கார்த்திக் ,இந்துமதி ஷாலினி சரோஜ் என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு,
விவேக் - மெர்வின் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் ரசிக்கும் விதம் .
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயம் .
முக்கோண காதல் கதை கொண்ட கதை களம்
ஆரம்பத்தில் இருந்த காட்சிகளின் வேகம் இடைவேளைக்கு பின் திரைக்கதையின் வேக தடையினால் ரசிக்க முடியாத காட்சிகள் .
இறுதியில் அஸ்வினை பார்த்து நமக்கு திருமணம் வேண்டாம் என நாயகி அவந்திகா மிஷ்ரா திடீரென சொல்வது , தேஜ் அஸ்வினி இருக்கும் இடத்திற்கு சென்று அஸ்வின் தன் நிலையை சொல்லி தன்னை ஏற்றுக்கொள்ள சொல்வது என நம்ப முடியாத காட்சிகள் .
ஒளிப்பதிவிலும் , இசையிலும் கவனமாக இருந்த இயக்குனர் ஹரிஹரன் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் முக்கோண காதல் கதை பட வரிசையில் முக்கியமான படமாக இந்த படம் அமைந்திருக்கும்.