top of page

'தேள்' விமர்சனம்


கந்து வட்டி கொடுப்பவரிடம் கோயம்பேடு மார்க்கெட்டில் அடியாளாக இருக்கும் பிரபுதேவா வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அதை கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை அடித்து பணம் வசூலிக்கும் வேலை செய்கிறார்.


இந்நிலையில் சொந்த பந்தங்கள் யாரும் இல்லாத ஆதரவில்லாத பிரபு தேவாவிடம் நான்தான் உன் தாய் ஈஸ்வரிராவ் சொல்ல, அவரை அடித்து கோபப்படும் பிரபு தேவா ஒரு கட்டத்தில் அவர் மீது அனுதாபப்பட்டு பாசத்துடன் தன்னுடன் சேர்த்து கொள்கிறார் .


இந்நேரத்தில் மர்ம கும்பலால் ஈஸ்வரிராவ் கடத்தப்படுகிறார்,

அதன் பிறகு ஈஸ்வரிராவை பிரபுதேவா தேட ,

பிரபுதேவா ஈஸ்வரிராவை கண்டுபிடித்தாரா ? இல்லையா?

ஈஸ்வரிராவை எதற்காக கடத்தினார்கள் என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் 'தேள்'

முரட்டுத்தனமான அடியாள் கதாபாத்திரத்தில் பிரபுதேவா

வசனங்கள் குறைவாக இருந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத புதிய பிரபுதேவாவாக சிறப்பாக நடித்துள்ளார்.


நாயகியாக சம்யுக்தா ஹெக்டே துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். நடனத்தில் பிரபுதேவாவுக்கு இணையாக இளமை துடிப்புள்ள வேகம் !!

அழுத்தமான கதாபாத்திரத்தில் பிரபுதேவாவின் அம்மாவாக ஈஸ்வரி ராவ் , உணர்ச்சிமயமான நடிப்பில் தன் திறமையை நிரூபிக்கிறார் .

காமெடிக்கு யோகி பாபு , வில்லனாக சத்ரு, மாரிமுத்து,இமான் அண்ணாச்சி ,பரணி என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு


ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் கோயம்பேடு மார்க்கெட் காட்சிகள் பாராட்டும் படி உள்ளது

சி.சத்யாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் !

முரட்டு குணம் கொண்ட ஒருவன் தன் தாய் மீது வைத்திருக்கும் பாசத்தினால் எப்படி மனிதனாகிறான் என்ற கதை களத்தை மையமாக கொண்டு ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஆர்ப்பாட்டம் இல்லாத பிரபுதேவாவின் நடிப்புடன், கோயம்பேடு மார்க்கெட்டில் கந்து வட்டி பண பரிமாற்றத்தில் நடக்கும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் வட்டியினால் அவதிப்படும் மக்களின் வலிகளையும், வேதனைகளையும் மிக தெளிவாக காட்சிப்படுத்தி கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரிகுமார்,



bottom of page