'வீரபாண்டியபுரம்' விமர்சனம்

இரண்டு கிராமங்களுக்கு இடையே நடந்த தேர்தல் தகராறில் வீரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சரத் லோகிதாஸ் குடும்பமும் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் குடும்பமும் ஜென்ம பகையாளிகளாக மாறி வெறித்தனமாக கத்தியுடன் வெட்டி கொண்டு எந்த நேரமும் பகையோடு இருக்கும் நிலையில்,
கல்லூரியில் படிக்கும் சரத் லோகிதாஸ் மகள் மீனாட்சி, தான் ஒரு அனாதை என சொல்லும் ஜெய்யை காதலிக்கிறார் .
பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோயிலில் ஜெய்யுடன் திருமணம் செய்து கொள்ள மீனாட்சி முடிவு செய்ய தாலி கட்டும் நேரத்தில், பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் வேண்டாம் உங்க அப்பா சம்மதம் சொன்னாதான் நம் திருமணம் என ஜெய் மீனாட்சியிடம் சொல்ல ,
ஜெய் சொல்வதை ஏற்று கொண்ட மீனாட்சி, சரத் லோகிதாஸிடம் சம்மதம் வாங்க ஜெய்யை அழைத்துக்கொண்டு வீரபாண்டியபுரம் செல்கிறார் .
மகளின் காதலை தெரிந்து கொண்ட சரத் லோகிதாஸ் மீனாட்சியின் காதலனான ஜெய்யை கண்ட துண்டமாக வெட்டி போட தன் தம்பிகளுடன் காத்து கொண்டிருக்கிறார் . திருமணம் செய்து கொள்ளாமல் வரும் காதலர்களை பார்த்த சரத் லோகிதாஸ் மனம் மாறி மகளின் விருப்பப்படி அவரது காதலனான ஜெய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் .
ஜெய்க்கு மீனாட்சியை திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்யும் சரத் லோகிதாஸ் , திருமணம் நடக்கும் குல தெய்வ கோயிலில் ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
இந்நேரத்தில் சரத் லோகிதாஸை ஜெய் கொலை செய்வதுடன் , அவருடைய தம்பிகள் அனைவரையும் கொல்ல திட்டமிடுகிறார்.
அனாதை என சொல்லும் ஜெய்யின் உண்மை கதை என்ன ?
அவர் ஏன் சரத் லோகிதாஸையும் அவரது தம்பிகளையும் கொலை செய்தார் ! என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் 'வீரபாண்டியபுரம்'
கதையின் நாயகனாக ஜெய் கதைக்கேற்றபடி மிக சிறப்பாக நடித்துள்ளார் . இவரது கடின உழைப்பு சண்டை காட்சிகளில் தெரிகிறது .
கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான கதாபாத்திரங்களில் நாயகிகளாக மீனாட்சி கோவிந்தராஜன் , அகன்ஷா சிங்
காளி வெங்கட் ,பால சரவணன் .சரத் லோகிதாஸ், முத்துக்குமார், அஜெய் ,ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பு !. இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜெய் யின் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம் !
இரண்டு கிராமத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு உள்ள வெறித்தனமான பகையை மையப்படுத்திய கதையாக அடிதடி ,ஆக்க்ஷன் ,காதல் என அனைவரும் ரசிக்கும் விதமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
'வீரபாண்டியபுரம்' 3 / 5