'ஆறாம் நிலம்' விமர்சனம்

இலங்கையில் நடந்த ஈழத்து இறுதி போரின் முடிவில் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த மக்கள் போருக்கு பின், சிங்கள ராணுவத்தினரால் சீரழிந்து அவர்கள் படும் சித்ரவதைகளும் கொடுமைகளும் ,
ராணுவத்திடம் சரணடைந்த மக்களின் குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து வாழும் துன்பங்களின் பிரதிபலிப்பையும், உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்கள் பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் 'ஆறாம் நிலம்'
நிச்சயம் தன் கணவன் மீண்டு வருவான் என காத்திருக்கும் மனைவியும் , தந்தையின் வருகைக்காக ஏங்கும் மகளும் ,போரின் போது சரணடைந்த தன் மகன் திரும்பி வருவான் என நினைக்கும் தாய் பின் தனது மகன் வருவானா என்கிற சந்தேகத்துடன் நம்பிக்கையில்லாமல் கதறும்போதும் , என இந்த கதாபாத்திரங்களின் உணர்ச்சிமயமான நடிப்பில் ஈழத்து மக்களாகவே திரையில் வாழ்ந்துள்ளனர்.
கண்ணி வெடி வெடித்து ஒரு பெண்ணுக்கு அடிபடும்போதும் ,கண்ணி வெடிகளை தேடும்போது மனித எலும்புக் கூடு கிடைப்பதும் சினிமாத்தனம் இல்லாமல் உண்மை சம்பவம் போல காட்சிகள் தெரிகிறது.
நாயகியாக நடித்துள்ள நவயுகா ,மகளாக வரும் தமிழரசி, கண்ணிவெடிகளை எடுக்கும் கண்காணிப்பாளராக வரும் மன்மதன் பாஸ்கி என படத்தில் நடிக்கும் அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் சிவசாந்தகுமார் ஒளிப்பதிவும், சிந்தக்கா ஜெயக்கொடி இசையும் படத்தின் கதைக்களத்திற்கு கூடுதல் பலம் !
ஈழத்து போருக்கு பின் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வலியையும் சோகத்துடன் கூடிய அவர்களது துன்பங்களையும் இயல்பான கதைக்களத்துடன் இயக்கிய இயக்குநர் ஆனந்த ரமணனையும் , இயக்குனரின் படைப்புக்கு கை கொடுத்த ஐபிசி தமிழையும் மனதார பாராட்டலாம் !!
'ஆறாம் நிலம்' இதயத்தின் வலி
johni