top of page

'கிளாப்' (வலி)மை நிறைந்த வெற்றி !!!! 4.5 / 5


ஆதியை சிறு வயது முதல் தட கள வீரராக உருவாக்குவதில் முயற்சி எடுக்கும் பிரகாஷ்ராஜ் , ஆதி இளைஞரான பின் மாநில அளவில் மாவட்ட அளவில் தட கள வீரராக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் .....

இருவரும் பைக்கில் செல்லும்போது ஏற்படும் சாலை விபத்தில் பிரகாஷ்ராஜ் மரணமடைய ....ஆதி படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில்.... அவரது ஒரு கால் வெட்டி எடுக்கப்படுகிறது .

பின்னாளில் தன் காதல் மனைவியான ஆகான்ஷா சிங்குடன் கட்டை காலுடன் மன உளைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்க ,,,,, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தட கள வீராங்கனையான க்ரிஷா குரூப் தன் தந்தை மரணத்துக்கு பின் ஒரு வருடமா ஓடுவதில்லை ,எல்லாத்துக்கும் காரணம் சாதிய அதிகாரம் ,இங்க திறமைக்கு மரியாதையை இல்ல சார் ,,,,என தன்னுடன் பணி புரியும் சக அலுவலக உதவியாளர் முனீஷ்காந்த் ஆதியிடம் புலம்ப,,,, ,

திறமையான க்ரிஷா குரூப்பை அழைத்து வந்து அந்த பெண்ணுக்கு பயிற்சியாளர் மூலம் நேஷனல் சாம்பியன் ஆக்க நினைக்கிறார் ஆதி...

ஏற்கனவே நடந்த பிரச்சினையினால் ஆதியை எதிரியாய் பார்க்கும் ....சாதிய வன்மை குணம் கொண்ட உயர் அதிகாரியான நாசர்,,,,

பயிற்சியாளர்கள் யாரும் க்ரிஷா குரூப்க்கு பயிற்சி கொடுக்க கூடாது என மறைமுக உத்தரவு போட்டு ஆதியின் முயற்சிக்கு தடை போட , ,,,

இறுதியில் ஆதியே க்ளாப்பை கையிலெடுத்து நேஷனல் லெவலில் சாம்பியன் ஆக்க க்ரிஷா குரூப்க்கு பயிற்சியாளராக மாறுகிறார் .

பயிற்சியாளராக மாறிய ஆதி நாசரின்,,,, சதி திட்டங்களை முறியடித்து!!!! நேஷனல் லெவலில் க்ரிஷா குரூப்பை வெற்றி பெற வைத்தாரா ! இல்லையா என்பதுதான் 'கிளாப்' படத்தின் கதை .....

நாயகனாக ஆதி விபத்தில் ஒரு கால் இல்லாத மனிதராக உடல் மொழி அசைவில் அனைத்து காட்சிகளிலும் தத்ரூபமாக அமைதியான நடிப்பில் வாழ்ந்துள்ளார் .


கதையின் நாயகியாக ஆகான்ஷா சிங் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் எதார்த்தம் . இறுதியில் ஆதியுடன் இணையும் காட்சிகளில் இதயம் கனக்கிறது !!


பிரகாஷ்ராஜ் ,நாசர் ,முனீஷ்காந்த் ,மைம் கோபி ,க்ரிஷா குரூப் ,பிரம்மாஜி ,மீனா வாசு என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !!


திரைக்கதையின் உயிரோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உறுதுணை !


படத்திற்கு பக்க பலமான பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு !


விபத்தினால் ஒரு கால் இழந்த தட கள வீரன் ,,,,, மாவட்ட அளவில் வெற்றி பெற்றும்..... ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள தட கள பெண் வீராங்கனை மூலம் சாதிய சதிகளையும் ,தடைகளையும் முறியடித்து போராடி வெற்றி பெற்று தன் கனவை நிறைவேற்றுவதுதான் இப்படத்தின் கதை !


இக் கதை களத்தை மையமாக கொண்டு நேர்த்தியான தெளிவான திரைக்கதை அமைப்புடன் , வசனங்களில் உயர் சாதிய கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்குமளவில் ....மனதளவில் ஒரு வலியுடன் படம் பார்க்கும் அனைவரும் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில் தனித்துவம் வாய்ந்த படமாக 'கிளாப்' படத்தை இயக்கியதற்கு,,,,,


இயக்குனர் ப்ரித்திவி ஆதித்யாவை கை தட்டலுடன் மனதார பாராட்டலாம் !!


'கிளாப்' (வலி)மை நிறைந்த வெற்றி !!!! 4.5 / 5


bottom of page