top of page

' மாறன் ' விமர்சனம் ... 3.5 / 5 உண்மையை பதிவிடும் நேர்மையான செய்தியாளன்


உண்மையான செய்திகளை மட்டும் பதிவிடும் நேர்மையான செய்தியாளரான தனுஷின் தந்தை ராம்கி ......நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில்...... சிறுவனான தனுஷ் கண் முன்னே ரவுடி கும்பலால் படு கொலை செய்யப்படுகிறார்.


குழந்தை பிறந்தவுடன் தனுஷின் தாயும் இறக்க , தனுஷும் தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டும் தாய்மாமன் ஆடுகளம் நரேன் ஆதரவுடன் வளர்கின்றனர்.


பின்னாளில் ஒரு சேனலில் தந்தை ராம்கியை போல நேர்மையான செய்தியாளராக தனுஷ் உருவெடுக்க...



இந்நேரத்தில் இடை தேர்தலில் நிற்க போகும் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி தான் ஜெயிப்பதற்காக வாக்கு பதிவு இயந்திரங்களில்

செய்ய போகும் ஏமாற்று வேலைகளை தனுஷ் கண்டுபிடித்து .....

விரைவு செய்திகளாய் அவரது சேனலுக்கு கொடுக்க ,

அதனால் கொதிப்படைந்த சமுத்திரக்கனி மேலும் தனுஷிடம் உள்ள சில ஆதாரங்களை தன் ஆட்களின் மூலம் வாங்க முயற்சி செய்யும் நிலையில்,


தனுஷின் தங்கை ஸ்ம்ருதி வெங்கட் மர்ம நபரால் கடத்தப்பட்டு எரித்து கொல்லப்படுகிறார் !


தனுஷை பழி வாங்க சமுத்திரக்கனி அவரது தங்கையை எரித்து கொன்றாரா ?


தனுஷின் தங்கையை கடத்திய அந்த மர்ம நபர் யார் ?


மர்ம நபரால் கடத்தப்பட்டு எரிந்த நிலையில் இருந்தது உண்மையில் தனுஷின் தங்கைதானா ?

என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'மாறன்'



நாயகனாக தனுஷ்.. செய்தி சேனலில் பணிபுரியும் துடிப்புடன் கூடிய இளைஞராக...... இளமை ததும்பும் செய்தியாளராக , தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனாக என அனைத்திலும் இயல்பான நடிப்பில் கவர்கிறார் !


நாயகியாக மாளவிகா மோகனன் , தனுஷின் தங்கையாக ஸ்ம்ருதி வெங்கட் , ராம்கி , சமுத்திரக்கனி, ஆடுகளம்நரேன்,எதிர்பாராததிருப்புமுனையாக.......வரும் அமீர் என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !


ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல் !!


கதைக்கேற்றபடி விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு!!

உண்மையான செய்திகளை மட்டும் பதிவிடும் நேர்மையான செய்தியாளனின் வாழ்க்கையை மையமாக கொண்டு அரசியல் , அண்ணன் - தங்கை பாசம் ,காதல்,,க்ரைம் த்ரில்லிங் என அனைத்தும் சேர்ந்த கதையாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன் !!


இடைவேளைக்கு பின் வரும் காட்சிகளின் வேகம் குறைந்தாலும் திடீரென திருப்புமுனையாய் தோன்றும் அமீரால் திரைக்கதை மீண்டும் வேகமெடுக்கிறது !!


' மாறன் ' உண்மையை உரக்க சொல்லும் நேர்மையான செய்தியாளன்




bottom of page