top of page

'ஓ மை டாக்' விமர்சனம்


ஊட்டியில் வாழும் அருண் விஜய்யின் மகனான அர்னவ் விஜய்க்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளை பிரியம் . இந்நிலையில் நாய்கள் போட்டிகளில் தனது நாயை பங்கேற்க வைத்து முதல் இடத்தில் இருக்கும் வினய் , தான் வளர்க்கும் நாய்களை பார்வையிடும் போது ஒரு நாய் குட்டி கண் தெரியாமல் குருடாக இருப்பதை பார்த்து....... அந்த நாய் குட்டியை கொல்ல தன் வேலையாட்களிடம் சொல்கிறார் .

அவர்கள் அந்த குட்டி நாயை கொன்று புதைக்க முயலும்போது ,அது தப்பித்து சென்று விட ,,,,, பள்ளியில் இருந்து வீடு திரும்பும் அர்னவ் விஜய் வரும் வழியில் சேற்றில் மாட்டி கொண்ட நாய் குட்டியை குளிப்பாட்டி யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து பாதுகாத்து..... பள்ளிக்கு செல்லும்போது ஸ்கூல் பையில் நாய் குட்டியையும் போட்டு கொண்டு பள்ளிக்கு செல்கிறான் .

அந்த நாய் குட்டிக்கு சிம்பா என பெயர் வைத்து சக மாணவர்களோடு விளையாடும்போது ஆசிரியர்கள் அர்னவ் விஜய்யை கண்டித்து,,, அவர்கள் அருண் விஜய்யிடம் சொல்ல , மகனின் பிடிவாதத்தால் நாய் குட்டியான சிம்பாவை தன் வீட்டில் வளர்க்கிறார் அருண் விஜய்.

தந்தையும் மகனும் சிம்பாவின் பரிதாப நிலை கண்டு கால் நடை மருத்துவர் மூலம் அதற்கு ஆபரேஷன் செய்து கண் பார்வையையும் கிடைக்க செய்கின்றனர் .

கண் பார்வை கிடைத்த சிம்பாவை நாய்கள் போட்டியிடும் போட்டிகளில் கலந்து கொள்ள அர்னவ் விஜய் அழைத்து செல்ல சர்வ தேச போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெறுகிறது சிம்பா .

நாய்கள் போட்டியிடும் போட்டிகளில் முதல் இடத்தில் வரும் நாயின் உரிமையாளரான வினய் ,,,,, சிம்பாவின் திறமையை தெரிந்து கொண்டு சிம்பாவை தன்னிடம் கொடுத்து விடும்படி அருண் விஜய்யை மிரட்ட , மிரட்டலுக்கு அடி பணியாத அருண் விஜய் அர்னவ் விஜய்யுடன் சர்வ தேச போட்டியில் சிம்பாவை பங்கேற்க வைக்கிறார் .


இறுதியில் போட்டியில் கலந்து கொண்ட சிம்பா வினய் செய்த சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான்

'ஓ மை டாக்' படத்தின் கதை

கதையின் நாயகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் அர்னவ் விஜய் !

அனைத்து காட்சிகளிலும், முக்கியமாக உணர்ச்சி மயமான இடங்களில் முக பாவனையில் மிக தேர்ந்த நடிகரை போல இயல்பாக நடித்துள்ளார் அர்னவ் விஜய் !

அருண்விஜய் ,விஜயகுமார் ,வினய்ராய் ,பானு சந்தர் ,மகிமா நம்பியார் , மனோ பாலா ,சுவாமி நாதன் ,ப்ரியா ராஜ்குமார் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .

கோபி நாத்தின் ஒளிப்பதிவும் ,நிவாஸ் k பிரசன்னாவின் இசையும் கதை களத்திற்கு பக்க பலம் .

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படி தொய்வில்லாத திரைக்கதையில் குழந்தைகள் குதூகலமாககொண்டாடும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார்

இயக்குனர் சரோவ் சண்முகம் .


'ஓ மை டாக்' குழந்தைகளின் கொண்டாட்டம் ! 3. / 5


bottom of page