top of page

'பயணிகள் கவனிக்கவும்' விமர்சனம்


வாய் பேச முடியாத மாற்று திறனாளியான விதார்த் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகளை தூங்காமல்....... கவனித்து வந்த நிலையில் வீட்டுக்கு வரும் போது மெட்ரோ ரயிலில் அசதியினால் படுத்து தூங்குகிறார் .

துபாயில் வேலை செய்து விடுமுறையில் சென்னை வரும் கருணாகரன் அதே மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய , விதார்த் குடிபோதையில் இருப்பதாக நினைத்து அவர் தூங்குவதை தனது மொபைல் போனில் படம் எடுத்து வலை தளங்கள் அனைத்திலும் அந்த படத்தை மீம்ஸ் வார்த்தைகளுடன் பதிவிடுகிறார் .

கருணாகரன் வலைத்தளங்களில் விதார்த் பற்றிய தவறான செய்தியுடன் கொண்ட போட்டோவை பார்க்கும் மக்கள் அனைவருக்கும் பகிர , செய்தி சேனலில் செய்தியாக ஒளிபரப்பபடும் அளவில் பிரச்னை விஸ்வரூபமெடுக்கிறது .

இதனால் குழப்பத்தில் இருக்கும் விதார்த்தின் குடும்பத்திற்கு விதார்த் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரான ‘கவிதாலயா’ கிருஷ்ணனின் மகள், விதார்த் வாய் பேச முடியாத ஒரு மாற்று திறனாளி மேலும்

அவர் குடி பழக்கம் இல்லாதவர்,,, ரயிலில் பயணிக்கும்போது எதனால் தூங்கினார் என்கிற உண்மையை ....செய்தி சேனலிலும் சில வலைதளங்களிலும் தெளிவாக பதிவிட,,,,, உண்மையை தெரிந்து கொண்ட அனைவரும் வலைதளங்களில் மன்னிப்பு கேட்கும் நேரத்தில்,,,,,

தன்னை பற்றிய தவறான செய்தியுடன் கொண்ட போட்டோவை வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் விதார்த் புகார் கொடுக்கிறார்.

விதார்த் கொடுத்த புகார் மீது போலீஸ் அந்த நபரை தேடுவதை செய்திகளின் மூலம் அறியும் கருணாகரன்,,,, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் , களை இல்லாத மாப்பிள்ளையாக போலீஸ் தன்னை கண்டுபிடித்து கைது செய்து விடுவார்களோ என பட படப்புடனும் ,பயத்துடனும் பித்து பிடித்தவன் போல இருக்க ,,,கருணாகரன் மனைவியான மாசும் ஷங்கரும் தன் கணவனின் நடவடிக்கைகளால் குழம்ப ,,, இறுதியில் வலைதளங்களில் பதிவிட்ட நபரான கருணாகரனை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்தார்களா ? மனதளவில் பாதிக்கப்பட்ட விதார்த் கருணாகரனை மன்னித்தாரா ? இல்லையா ? என்பதற்கான விடை சொல்லும் படம்தான் 'பயணிகள் கவனிக்கவும்'


வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக விதார்த் , உடல் மொழியில் படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் மாற்று திறனாளியாகவே நடிப்பில் வாழ்ந்துள்ளார் .

ஆரம்பத்தில் சந்தோசமாக இருக்கும் கருணாகரன் விளையாட்டாக தான் செய்த தவறினால் குற்றவாளியாக போலீஸ் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்தவுடன் பயம் கலந்த முக பாவனைகளுடன் அமைதியான நடிப்பில் அசத்துகிறார் .

விதார்த்தின் மனைவியாக லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, கருணாகரனின் காதலியாக மாசும் ஷங்கர், ‘கவிதாலயா’ கிருஷ்ணன், மூணார் ரமேஷ், பிரேம் குமார், RJ சரித்திரன் , R S சிவாஜி என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு .


ஷாமந்த் நாகின் இசையும் ,எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவும் கதைக்களத்திற்கு பக்க பலம் !


மொபைல் போனினால் ஒருவன் விளையாட்டாக செய்த தவறு , வலைத்தளங்களின் வேகத்தினால் ஒருவரது குடும்பமே மனதளவில் குழப்பமடைகிறது. பாராட்டும்படியான இந்த கதை கருவை மையப்படுத்தி இன்றைய இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தெளிவான திரைக்கதை அமைப்பில் மிக நேர்த்தியாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல்.


'பயணிகள் கவனிக்கவும்' மொபைல் போனில் திளைக்கும் மக்கள் கவனிக்க வேண்டிய படம் ! 3./ 5
bottom of page