top of page

''கூகுள் குட்டப்பா" விமர்சனம்


இஞ்சினியரிங் படிப்பை முடித்த தர்ஷன்,,,,, வீட்டு சமையல் வேலை முதல் தோட்ட வேலை வரை எல்லா வேலைகளையும் தானே செய்யும் தன் தந்தையான கே.எஸ்.ரவிக்குமாருடன் வாழும் நிலையில்,,,, வெளிநாடான ஜெர்மன் நாட்டில் வேலை செய்ய தர்ஷனுக்கு அழைப்பு வருகிறது .


யோகிபாபு துணையுடன் தர்ஷன்,,,,,, கே.எஸ்.ரவிக்குமாரை சமாதானப்படுத்தி வேலைக்காக ஜெர்மன் செல்கிறார் . அங்கு தன்னுடன் பணிபுரியும் லாஸ்லியாவை காதலித்து இணைந்து வாழ்தல் முறையில்இருவரும் ஒன்றாக வாழ்கின்றனர் .


இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தகவல் யோகி பாபு சொல்ல ... கே.எஸ்.ரவிக்குமாரை பார்க்க இந்தியா வரும் தர்ஷன்..... யாருடைய உதவி இல்லாமல் தனிமையாக இருக்கும் தந்தையை பார்த்துக் கொள்ள தனது நிறுவனத்தின் மூலம் ஒரு எந்திர ரோபோவை கொண்டு வருகிறார் .

ஆரம்பத்தில் எந்திர ரோபோவை பார்த்து வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார்,,,,,,, நேர்த்தியாக எந்திர ரோபோ தன்னை கவனித்து கொள்ளும் முறையை பார்த்து தனக்கு பிறந்த மகனை போலஅன்புடன் அதன் மேல் பாசத்துடன் பழகுகிறார் .

இந்நேரத்தில் வெளி நாட்டில் இருக்கும் தர்ஷனுக்கு .... எந்திர ரோபோ பரிசோதனைக்காக தன்னிடம் கொடுக்கப்பட்டது . ஏற்கனவே செய்த பரிசோதனையில் அந்த எந்திர ரோபோ வயதான இருவரை கொன்றுள்ளது என்பதை நிறுவன அதிகாரி சுரேஷ் மேனனால் .... தெரிந்து கொள்ள ,,,,,, அதிர்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமாரை எந்திர ரோபோவிடமிருந்து காப்பாற்ற லாஸ் லியாவுடன் பதற்றத்துடன் இந்தியாவுக்கு வருகிறார் .


இறுதியில் எந்திர ரோபோவிடமிருந்து கே.எஸ்.ரவிக்குமாரை தர்ஷன் காப்பாற்றினாரா ?


மகனாக பாவித்து எந்திர ரோபோவின் மேல் பாசம் வைத்த கே.எஸ்.ரவிக்குமாரின் நிலை என்ன ?


என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் ''கூகுள் குட்டப்பா'


மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’படத்தை தமிழில் 'கூகுள் குட்டப்பா என்ற' பெயரில் தயாரித்து படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.

கோவை பாஷையில் இவர் பேசும் நையாண்டித்தனமான வசனங்களால் படம் முழுவதும் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்படுமளவில் நடிப்பில் அசத்துகிறார்.


நாயகன் தர்ஷன் அறிமுக நடிகர் என்பதை சில காட்சிகளில் நிரூபிக்கிறார் .


நாயகி லாஸ்லியா அழகாக இருக்கிறார் . நடிப்பில் பேசும் பொம்மையாக தெரிகிறார் .


யோகிபாபு ,மனோபாலா , பிளாக் பாண்டி , பூவையார் ,பிராங்ஸ்டர் ராகுல் ,பவித்ரா லோகேஷ் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .


அர்வியின் ஒளிப்பதிவும் , ஜிப்ரானின் இசையும் கதைக்களத்திற்கு பக்க பலம் .


தொய்வில்லாத திரைக்கதையில் கதையுடன் சேர்ந்து எந்திர ரோபோ பயணிப்பதுபோல ரசிக்கும்படியான காட்சிகள் அமைத்து,,,,


குழந்தைகளுடன் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளனர் இயக்குனர்கள் சபரி -சரவணன்.


''கூகுள் குட்டப்பா' குழந்தைகள் கொண்டாடும் படமப்பா !! 3 ./ 5


bottom of page