top of page

' டான் ' விமர்சனம்



வியாபாரம் செய்து கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில்,,,, ஆண் குழந்தையாக சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.

எதுவொன்றிலும் தான் நினைத்தபடி சிவகார்த்திகேயன் இருக்க வேண்டும் என சிறுவனாக இருக்கும்போதே கண்டிப்புமிக்க தந்தையாக சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனை வளர்க்க .....


அதன்பின் சமுத்திரக்கனி பிடிவாதத்தால் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன்.

காலேஜில் மாணவர்களே பயந்து நடுங்கும் ஒழுக்கத்திற்கான ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் அடாவடி தனத்திற்கு...... சிவகார்த்திகேயன் தன் சாமர்த்தியத்தால் சில மாதங்களுக்கு எஸ்.ஜே.சூர்யாவை ஊருக்கு அனுப்ப,,,, மீண்டும் காலேஜிக்கு வரும் எஸ்.ஜே.சூர்யா தன் நிலைமை அனைத்திற்கும் காரணம் மாணவர்கள் மத்தியில் டான் ஆக திகழும் சிவகார்த்திகேயன்தான் என்பதை கண்டுபிடிக்க ,,,,,, அதன்பின் இருவருக்குள்ளும் பிரச்சனை ஆரம்பமாக,,,,,

அடக்கத்தோடு அமைதியா இருந்தா நீ இன்ஜினியரிங் டிகிரி வாங்குவே இல்லனா இன்ஜினியரிங் டிகிரி எப்படி நீ வாங்குவேன்னு நான் பார்க்கிறேன் என சிவகார்த்திகேயனை பார்த்து எஸ்.ஜே.சூர்யா சவால் விட,,,,,


இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் சவால்களை தாண்டி, சமுத்திரக்கனியின் ஆசைப்படி சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா?


வாழ்க்கையில் தான் நினைத்தபடி தன் திறமைக்கேற்ற துறையில் துறையில் சாதித்தாரா? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம் தான் 'டான்'


நாயகனாக சிவகார்த்திகேயன் துறு துறு இளைஞராக நடனம், காமெடி,காதல்,சோகம் என படம் முழுவதும் நடிப்பில் அசத்தல் !


நாயகியாக அழகான பிரியங்கா மோகன் நடிப்பில் இயல்பு .


படத்தின் மிக பலமான ஆளுமை எஸ்.ஜே.சூர்யா அனைவரும் எதிர்பார்க்கும் நடிப்பில் ஜொலிக்கிறார் .


கண்டிப்புள்ள தந்தையாக சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய்என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !


அனிருத் இசையில் பாடல்கள் முதல் பின்னணி இசை வரை கலக்கல் .


படத்திற்கு பக்க பலம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு .


கண்டிப்புமிக்க தந்தையிடம் வளரும் ஒருவன் ,தந்தையின் ஆசைக்காக இன்ஜினீரியரிங் கல்லூரியில் படித்தாலும் தன் திறமைக்கேற்ற துறையில் சாதித்து மிக பெரிய ஆளாக உயரும் கதையை மையமாக கொண்டு கலகலப்பான திரைக்கதை அமைப்பில் இறுதியில் படம் பார்க்கும் அனைவரும் கண்கலங்கும் கதையோட்டத்துடன் ரசிகர்கள் பாராட்டும்படி இப்படத்தை இயக்கியுள்ளார் சிபி சக்ரவர்த்தி .

எதிர்பார்த்து வரும் ரசிகர்களை ஏமாற்றாத 'டான் ' 3.5 / 5

bottom of page