‘நெஞ்சுக்கு நீதி’ விமர்சனம்

வெளிநாட்டில் படித்து இந்தியாவில் காவல்துறை அதிகாரியாக வரும் உதயநிதி ,,, சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் கோவையில் உள்ள பொள்ளாச்சி நகராட்சியில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.
அந்த இடத்தில் 3 தலித் பள்ளி சிறுமிகள் மாயமாகும் நிலையில்,,,,, 2 சிறுமிகள் மர்மமான முறையில் தூக்கிலிடப்பட்டு இறக்க ,ஒரு சிறுமி எங்கே சென்றார் அவரது நிலை என்ன ? என்பது தெரியாத நேரத்தில் அந்த சிறுமிகளின் கொலை கௌரவ கொலை என உடனிருக்கும் அதிகாரிகள் சொல்ல,, சந்தேகம் அடையும் ஐபிஎஸ் அதிகாரி உதயநிதி கொலை வழக்கை தானே முன்னின்று விசாரிக்கிறார் .
இதற்கிடையில் கொலை வழக்கை விசாரிக்க விடாமல் அரசியல்வாதிகளும் ஜாதி கட்சித் தலைவர்களும் உதயநிதிக்கு எதிராக பல தடைகள் செய்கின்றனர் .
அரசியல்வாதிகளும் ஜாதி கட்சித் தலைவர்களும் உதயநிதிக்கு செய்யும் தடைகளை உடைத்து உண்மையான குற்றவாளியை ஐபிஎஸ் அதிகாரி உதயநிதி கண்டுபிடித்தாரா ?
கொலைக்கான காரணம் என்ன ? கொலையாளி யார் ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம் தான் ‘நெஞ்சுக்கு நீதி’
நாயகனாக விஜயராகவன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியாக,, படம் முழுவதும் ரசிகர்களை கவரும் வகையில் உண்மையான ஐபிஎஸ் அதிகாரியாகவே நடிப்பில் வாழ்ந்துள்ளார்.
உதயநிதியின் மனைவியாக நாயகி தன்யா ரவிச்சந்திரன், போராளியாக குமரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆரி, போலீஸ் இன்ஸ்பெக்டராக சுரேஷ் சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டராக இளவரசு, ஷிவானி ராஜசேகர், , மயில்சாமி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .
திபு நினன் தாமஸின் இசையும் , தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கதை களத்திற்கு பக்க பலம் !
‘ஆர்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் ரீமேக் என்றாலும், நேரடி தமிழ்ப் படம் போல,,,, சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் அவரை கேவலப்படுத்துவது ,,,,,காவல் துறையில் சாதிய பாகுபாடு பார்க்கும் அவலங்கள் ,,,, இந்தித் திணிப்பு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவங்கள் ,என சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி சாதிக்கு எதிரான வசனங்களால் சாட்டையடி கொடுக்கும் வகையில்,,, படத்திற்கு மிக பெரிய பலமான தமிழரசன் பச்சைமுத்துவின் அனல் பறக்கும் வசனங்களை கொண்டு படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டலுடன் பாராட்டும்படி இப்படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.
‘நெஞ்சுக்கு நீதி’ சாதிய கொடுமைகளுக்கான சாட்டையடி ! 3.5 / 5