போத்தனூர் தபால் நிலையம்' விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையத்தில் நாயகன் பிரவீன் அப்பா ஜெகன் கிரிஷ் கடமைமிக்க எதற்கும் ஆசைப்படாத நேர்மையான போஸ்ட் மாஸ்டராக வேலை செய்கிறார் .
இந்நேரத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே பிரவீன் ,வெங்கட் சுந்தர்,அஞ்சலி ராவ் ஆகிய மூவரும் நண்பர்கள் . இளைஞனான பிரவீன் வெளி நாட்டில் பிரபலமாகியுள்ள கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்ய ஆசைப்படும் நிலையில் ,,,,, தொழிலுக்காக பேங்க் லோன் வாங்க பேங்கிற்கு செல்கிறார்.
வழியில் கை சூப்பும் ஒருவரை பார்த்து வெங்கட் சுந்தருடன் பிரவீன் கிண்டலடிக்க ,,, பிரவீன் கிண்டலடித்ததை மனதில் கொண்டு பேங்க் லோன் கிடைக்க செய்யாமல் செய்கிறார் கை சூப்பும் மனிதனான பேங்க் மேனேஜர் .
இதற்கிடையில் வார இறுதி நாளான சனிக்கிழமையன்று… போஸ்ட் ஆபீசில் மக்களின் சேமிப்பு பணமான ரூ. 7 லட்சத்து 40 ஆயிரத்தை கணக்காளர் சீத்தாராமன் பேங்கில் டெபாசிட் செய்ய தாமதம் செய்ததால் ஜெகன் கிரிஷ் திருடர்களுக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுற்கு கொண்டு வருகிறார்.
வரும் வழியில் அந்த பணத்தை யாரோ ஒருவன் திட்டமிட்டு கொள்ளையடிக்க,,,,,பணத்தை பறி கொடுத்த ஜெகன் கிரிஷ் மக்களின் பணத்தை நினைத்து கதறுகிறார் .
இந்நிலையில் ஜெகன் கிரிஷ் மகனான பிரவீன் நாளை ஞாயிற்றுக்கிழமை,,,,, யார் பணத்தை எடுத்தார்களோ அவர்களை கண்டுபிடித்து நீங்கள் பறி கொடுத்த மொத்த பணத்தையும் இந்த ஒருநாளில் மீட்டு தருகிறேன் என தன் அப்பாவுக்கு உத்தரவாதம் அளித்து,,,,, வெங்கட் சுந்தர்,அஞ்சலி ராவ் உடன் கொள்ளையடித்த திருடனை தேடி செல்கிறார் பிரவீன்.
சேமிப்பு பணமான ரூ. 7 லட்சத்து 40 ஆயிரத்தை கொள்ளையடித்தவர்கள் யார் ?
தன் நண்பர்களுடன்,,,, கொள்ளையடித்த திருடனை தேடி சென்ற பிரவீன் குற்றவாளியை கண்டுபிடித்து மொத்த பணத்தையும் மீட்டாரா ?
என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் 'போத்தனூர் தபால் நிலையம்'
நடிப்பு ,கதை, திரைக்கதை, வசனம் , கலை , எடிட்டர் என பல்கலை வித்தகராக அசத்துகிறார் கதையின் நாயகனாக நடித்துள்ள பிரவீன் .
குறிப்பாக 1990களில் நடைபெறும் கதை என்பதால் படம் பார்ப்பவர்கள் 1990ம் ஆண்டிற்கே அழைத்து செல்லுமளவில் இவரது கலை இயக்கம் மட்டும் தனித்துவமான பாராட்டை பெறுகிறது .
அஞ்சலி ராவ் ,வெங்கட் சுந்தர் ,சீத்தாராமன்,சம்பத்குமார்,தீனா அங்கமுத்து என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .
தென்மா இசையும் ,சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவும் கதை களத்திற்கு பக்க பலம் !
நேர்மையான போஸ்ட் மாஸ்டரிடமிருந்து ஒருவன் பணத்தை கொள்ளையடிக்கிறான்.அவரது மகன் அந்த பணத்தை மீட்க தன் நண்பர்களுடன் திருடனை தேடி செல்கிறார் .....
இந்த கதையை மையமாக கொண்டு ஆரம்பத்தில் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும்,, இடைவேளைக்கு பின் திரைக்கதையின் வேகத்திற்கு இணையாக ரசிக்கும்படியான காட்சிகள் அமைத்து எந்த படத்திலும்,,,
யாரும் பார்க்காத ஒரு தனித் துவமான கதையை,,
படம் பார்ப்பவர்கள் அனைவரும் தனது நடிப்பையும் பாராட்டும்படி மிக திறமையாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன் !
'போத்தனூர் தபால் நிலையம்' தனித்துவமிக்க புதுமையான படைப்பு ..... 4 / 5