'வாய்தா' விமர்சனம்

இரு உயர் சாதிகளுக்குள் பிரச்சனை இருக்கும் ஒரு ஊரில் ரோட்டின் ஓரம் துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் கடையை நடத்தும் தாழ்த்தப்பட்ட ஏழையான மு .ராமசாமி,,,, தன் வேலையை பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் ,,,,
உயர் சாதி இளைஞன் பைக்கில் திரும்பும்போது, வேறு சாதி ஆள் ஒருவர் எதிரே வர ,,, அந்த இளைஞன் நிலை தடுமாறி வண்டியுடன் மு .ராமசாமி மீது மோத,,,அயர்னிங் பெட்டியில் இருக்கும் நெருப்பு கரி மு .ராமசாமி மீது பட்டு தீ காயங்களுடன் ஒரு கை உடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்நிலையில் இளைஞனின் அப்பா ராமசாமியிடம் நியாயமான பணத்தை கொடுத்து விடுகிறோம் என சமரசம் பேச ,,,,,, இந்த விபத்து நடக்க காரணமான எதிரே வந்த வேறு சாதி ஆள் ராமசாமி சார்பில் மேற்கொண்டு பணத்தை கேட்க,, இருவருக்குள்ளும் ராமசாமியின் பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது .
இந்நேரத்தில் ..பிரச்சனையை திசை திருப்ப,,,,,,,, வண்டியை திருடி விட்டதாக ராமசாமி மீது இளைஞனின் அப்பா பொய் வழக்கு போட,,,,,. ராமசாமிக்காக வழக்காடும் வக்கீல் நீதிபதியிடம் உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லி பாதிக்கபட்ட ராமசாமிக்கு ஒரு பெரிய தொகை கிடைக்க வழக்காடி வெற்றி பெற போராடுகிறார் .
இறுதியில் ராமசாமியின் வழக்கு விசாரணை என்ன ஆனது ? வழக்கு வெற்றி பெற்று எதிர்பார்த்த பெரிய தொகை ராமசாமிக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பதுதான் வாய்தா படத்தின் மீதி கதை
கதைக்களத்தின் முக்கிய கதாபாத்திரமான மு ராமசாமி படம் பார்ப்பவர்கள் பரிதாபப்படும்படி அழுத்தமான நடிப்பில் அசத்துகிறார் !
நாசர் , புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா என நடிப்பில் இவர்களது சிறப்பு !
லோகேஸ்வரன் இசையும் ,சேது முருகவேல் ஒளிப்பதிவும் கதைக்களத்திற்கு பக்க பலம் !
சில இடங்களில் இன்றும் நடைபெறும் சாதி பார்த்து மனிதனை வெறுத்து ஒதுக்கும் அவல நிலை , நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடக்கும் வழக்குகள் வாய்தாவினால் கால தாமதமாவது ,வாதாடும் வக்கீலே கமிஷன் முறையில் பணத்தை பற்றி நீதிபதியிடம் தனிப்பட்ட முறையில் பேசுவது, உயர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசும் அடிமைத்தனமான வார்த்தைகள், தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் தங்களின் பிரச்சனைக்காக கோர்ட்டுக்கு சென்றால் நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் அவர்கள் கதறும் அழு குரல் ! என எதார்த்தமான காட்சிகளுடன் மிக இயல்பாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மதிவர்மன்.
'வாய்தா' ஏழை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி 3 / 5