’வீட்ல விசேஷம்’ விமர்சனம்
Updated: Jun 19, 2022

ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக பணி புரியும் சத்யராஜ் மனைவி ஊர்வசி மற்றும் மூத்த மகன் ஆர் ஜே பாலாஜி.இளைய மகன் விஸ்வேஷ் தன் தாயான லலிதாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ,,,
ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி பள்ளியின் தாளாளரின் மகளான அபர்ணா பாலமுரளியை காதலிக்கிறார் .
இந்நேரத்தில் சத்யராஜின் இயல்பான தாம்பத்ய வாழ்க்கையில் ஊர்வசி கர்ப்பமடைய,, திருமண வயதில் இருக்கும் மகனான ஆர் ஜே பாலாஜி,, ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து,,,,,, கர்ப்பமாக இருக்கும் ஊர்வசியை பிடிக்காமல் பெற்றோர்களான இருவரையும் வெறுக்கிறார்.

காதலர்களான ஆர் ஜே பாலாஜியும் அபர்ணா பாலமுரளியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யும் நேரத்தில் அபர்ணா பாலமுரளியின் அம்மா பவித்ரா லோகேஷ்,,,,, ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அபர்ணா பாலமுரளியிடம் திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளை சொல்லி இருவரது திருமணத்திற்கும் தடை விதிக்கிறார் .
இறுதியில் ஊர்வசியின் கர்ப்பத்தை ஏற்று கொண்டு கர்ப்ப காலத்தில் ஊர்வசிக்கு வேண்டிய உதவிகளை ஆர் ஜே பாலாஜி செய்தாரா ?
பவித்ரா லோகேஷின் தடையை மீறி அபர்ணா பாலமுரளியை ஆர் ஜே பாலாஜி திருமணம் செய்து கொண்டாரா ?
என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் ’வீட்ல விசேஷம்’
நாயகனாக நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி செண்டிமெண்ட் கலந்த உணர்ச்சிமயமான காட்சிகளில் பெற்றோர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட மகனாகவும் .....வழக்கமாக அவரது பாணியில் காமெடியுடன் சேர்ந்த ஜாலியான கிண்டல் கலந்தஇளைஞனாகவும் நடிப்பில் அசத்துகிறார் .
நாயகியாக அபர்ணா பாலமுரளி கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பு .
சத்யராஜ் - ஊர்வசி இருவரும் கதைக்களத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்கள். பேர குழந்தைகள் பார்க்கும் வயதில் சத்யராஜூம் ஊர்வசியும்,,,,, இந்நிலையில் ஊர்வசி கர்ப்பமாகிறார் , வயதான காலத்தில் தான் அப்பாவாகும் சந்தோசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அப்பாவித்தனமான அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் சத்யராஜ் .

ஊர்வசி நடிப்பில் ராட்சசியாக குழந்தை பிறக்கும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது .
யோகி பாபு ,மயில் சாமி , ஜார்ஜ் ,புகழ் ,ஷிவானி நாராயணன் , பவித்ரா லோகேஷ்,விஸ்வேஷ் ,கமலா காமேஷ் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .
கார்த்திக் முத்துகுமாரின் ஒளிப்பதிவும், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையும். பாடல்களும் படத்திற்கு பக்க பலம்
பா .விஜய்யின் பாடல்கள் அனைத்தும் பாராட்டும் ரகம் .
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'பதாய் ஹோ' என்கிற படத்தின் ரீமேக் தான் இந்த படம்,,,,, இருந்தாலும் தமிழ் படத்திற்கு ஏற்றபடியான காட்சிகளுடன் 50 வயதில் ஒரு பெண் கர்ப்பமானால் அந்த பெண்ணை கேவலமாக குடும்பத்தார் பார்த்தாலும்,, கர்ப்பமான தன் மனைவியை காதல் உணர்வுடன் பாசத்துடன் கவனித்து கொள்ளும்,,,,,,, பணியில் ஓய்வு பெறும் வயதை நெருங்கும் அன்பான கணவன்.
இந்த அழகான கதை களத்தை தெளிவான திரைக்கதை வசனங்களுடன் அனைவரும் ரசிக்கும்படி மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார்கள் இயக்குனர்கள் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன்.
’வீட்ல விசேஷம்’ அனைவரும் ரசிக்கும்படியான குடும்ப படம்.
3.5/ 5