top of page

'வேழம்' விமர்சனம்


தாயில்லாத அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் சிறு வயது முதல் ஒன்றாக பழகி வாலிப பருவத்தில் காதலர்களாக வாழ்ந்து வரும் நிலையில்,,,,

இருவரும் ஒருநாள் பைக்கில் செல்லும் போது,,,, அசோக் செல்வனையும் ஐஸ்வர்யா மேனனையும் மர்ம மனிதர்கள் பயங்கரமான ஆயுதங்களால் தாக்குகின்றனர் . இதில் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்படுகிறார்.

கவலைக்கிடமான நிலையில் உயிர் பிழைத்த அசோக் செல்வன்,,,,, ஐஸ்வர்யா மேனனை கொன்ற மர்ம மனிதர்களில் ஒருவனது பேசும் குரலை மட்டும் வைத்து அந்த கொலையாளிகளை தேடி அலையும் நேரத்தில் ,


தான் ஐஸ்வர்யா மேனனை காதலித்ததையும் பின் மர்ம மனிதர்களால் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்பட்டதையும் அஜய்யின் காதலியின் தோழியான ஜனனியிடம் அசோக் செல்வன் சொல்ல,,,,,,, அசோக் செல்வன் மேல் காதல் வயப்படும் ஜனனி,,,, தன் மீது விருப்பமில்லாத அசோக் செல்வனை மனமார காதலிக்கிறார் .

இறுதியில் ஐஸ்வர்யா மேனனை கொன்ற மர்ம மனிதர்களை அசோக் செல்வன் கண்டிபிடித்தாரா ?

கொலையாளிகள்,,,,,,,,இருவரையும் கொலை செய்வதற்கான காரணம் என்ன ?


தன் மீது காதல் கொண்ட ஜனனியை அசோக் செல்வன் ஏற்று கொண்டாரா ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'வேழம்'


கதையின் நாயகனாக அசோக் செல்வன் கதைக்கேற்றபடி புன்னகை தவழ்ந்த காதலனாகவும், ஆக்ரோஷம் கலந்த பழி வாங்க துடிக்கும் இளைஞனாகவும் இயல்பான நடிப்பில் மிளிர்கிறார் .


நாயகிகளாக ஜனனியும் , ஐஸ்வர்யா மேனனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் எதார்த்தம் .


ஷ்யாம் சுந்தர் ,சங்கிலி முருகன் ,கிட்டி ,அஜய் ,தேனப்பன் ,கிரண் ,அபிஷேக் ,மோகன் அகஷே, சாதிகா ,ராதிகா என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு.


.

சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவும் ,ஜானு சந்தரின் இசையும் படத்திற்கு பக்க பலம். .


காதலியை கொன்ற மர்ம மனிதர்களை தேடும் காதலன் இறுதியில் அவர்களை கண்டுபிடித்து என்ன செய்தான் ? என்கிற திரில்லிங் நிறைந்த இந்த கதையை மையமாக கொண்டு,,,

இடைவேளைக்கு பின் வரும் எதிர்பாராத திருப்பங்களில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் ,,,திரைக்கதையின் வேக குறைவு சில இடங்களில் பலவீனமாக அமைந்தாலும் திரில்லர் கதைக்கான மிரட்டலுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சந்தீப் ஷாம்.


'வேழம்' ரசிக்கலாம்

3 / 5


bottom of page