‘பட்டாம் பூச்சி’ விமர்சனம்

சென்னை மத்திய சிறையில் தூக்கு தண்டனை கைதியாக சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜெய்,,,,பட்டாம் பூச்சி என்ற பெயரில் சைக்கோ கொலையாளியை பற்றி கட்டுரை எழுதிய பத்திரிக்கையாளர் ஹனி ரோஸை சந்திக்க விரும்பும் நிலையில் ,,,,
ஜெய்யை ஹனி ரோஸ் சந்திக்கும் நேரத்தில் தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்வதுடன் , பட்டாம் பூச்சி என்ற பெயரில் பல கொலைகள் செய்த சைக்கோ கொலைகாரன் நான்தான் என ஜெய் கூற அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ஹனி ரோஸ்.
இந்த தகவல் செய்தியாக பத்திரிக்கையில் வெளியானதும் ஜெய்யின் தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவர் செய்த கொலைகளை பற்றி ஒரு மாத கால அவகாசத்திற்குள் விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது.. காவல்துறைஅதிகாரி சுந்தர்.சி-யிடம் ஜெய் செய்த கொலைகளை விசாரிக்கும் பொறுப்பை காவல்துறை ஒப்படைக்கிறது.
விசாரணையை மேற்கொள்ள வரும் சுந்தர்.சி-யிடம் உண்மையை சொல்ல சில நிபந்தனைகளை போடும் ஜெய், அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி நீதிமன்றத்தில் தனது புத்திசாலித்தனத்தால் தன்னை நிரபராதி என நிரூபித்து விடுதலையாகி விடுகிறார்.
ஜெய்தான் உண்மையான ‘பட்டாம்பூச்சி’ என தெரிந்து கொள்ளும் சுந்தர்.சி அதனை சட்ட ரீதியாக நிரூபிக்கப் போராடுகிறார்.
இறுதியில் சுந்தர்.சி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் ‘பட்டாம் பூச்சி’
காவல்துறைஅதிகாரியாக நடித்துள்ள சுந்தர்.சி கம்பீரமான தோற்றத்தில் அசத்துகிறார் .ஆக்ஷன் காட்சிகளிலும் உணர்ச்சிமயமான காட்சிகளிலும் அனுபவ நடிப்பால் அமர்க்களப்படுத்துகிறார்.
சிறு வயதிலிருந்தே கழுத்து பகுதியில் ஒருவித நரம்பு பாதிப்பினால் அவதிப்படும் சைக்கோ கொலைகாரனாக ஜெய் மிரட்டினாலும் நடிப்பினால் ‘பட்டாம் பூச்சி’ என்ற கதாபாத்திரத்தை காப்பாற்ற போராடுகிறார் .
நாயகியாக அழகான ஹனி ரோஸ் நடிப்பில் இயல்பு .
கான்ஸ்டபிளாக வரும் இமான் அண்ணாச்சியும் ,பேபி மானஸ்வியும் சிறப்பாக நடித்துள்ளனர் .
நவநீத் சுந்தரின் இசையும், கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்
தூக்குதண்டனையிலிருந்து தப்பிக்க சைக்கோ கொலைகாரன் ஒருவன் எடுக்கும் முயற்சிகளை காவல்துறை அதிகாரி ஒருவர் எப்படி முறியடிக்கிறார் என்கிற சைக்கோ திரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டு படத்தின் வேகத்திற்கு இணையான திரைக்கதை அமைப்புடன் ஆக்க்ஷன் நிறைந்த காட்சிகளுடன் இயக்குனர் பத்ரி இயக்கியிருந்தாலும்,,,
திரைக்கதையில் இடைவேளைக்கு பின் வரும் ஒரே மாதிரியான சுந்தர் சி - ஜெய் துரத்தல் காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விறு விறுப்பு மேலும் கூ டியிருக்கும்.
பயமுறுத்த பாடுபடும் ‘பட்டாம் பூச்சி’
.......3 / 5