'ராக்கெட்ரி நம்பி விளைவு' விமர்சனம்

ISRO-வின் ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானியான நம்பி நாராயணன்,,,, ராக்கெட் தொழில்நுட்பத்தில் அவருக்குள்ள ஆர்வத்தினால் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கும் நேரத்தில்,,,,,, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திய தேசத்தின் மீது உள்ள நாட்டு பற்றால் நாசாவின் பணியை மறுத்து இந்தியா திரும்பி இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக பணியாற்றுகிறார் நம்பி நாராயணன் .
இந் நிலையில் நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு பாய்ந்து,,,, போலீஸ் கைது செய்து காவலில் வைத்து விசாரிக்கிறது . குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனின் வழக்கு இறுதியில் என்ன ஆனது? அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் ’ ராக்கெட்ரி நம்பி விளைவு ’
விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்துள்ள மாதவன் உடல் மொழி, உடலமைப்பு ,வெளுத்த தாடி, வசன உச்சரிப்பு என படம் முழுவதும் மாதவன் என்கிற நடிகரே தெரியாமல் நடிப்பில் நம்பி நாராயணனாகவே வாழ்ந்துள்ளார் .
இளமைகாலம் முதல் வயதான காலம் வரை உடல்மொழியில் உண்மையான விஞ்ஞானியாகவே ரசிகர்களை கவரும் விதமான மாதவனின் நடிப்பு அசத்தல் .

மாதவனுக்கு மனைவியாக நடித்துள்ள சிம்ரன் உணர்ச்சிமயமான காட்சிகளில் மிரட்டலான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் .
நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் நடிகராகவே நடிக்கும் சூர்யா , ரவி ராகவேந்திரா , கார்த்திக் குமார் ,மிஷா கோஷல் , ஷாம் ரங்கநாதன் ,தினேஷ் பிரபாகர் ,சாம் மோகன் , ஸ்ரீராம் பார்த்தசாரதி என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் இயல்பு !
ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே ஒளிப்பதிவும் , சாம் சி எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் !
படத்தின் ஆரம்பத்தில் அறிவியல் சார்ந்த ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளினால் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஆவண படமாக இருக்குமோ என நினைக்கும் நேரத்தில் இடைவேளைக்கு பின் வரும் காட்சிகளில் உள்ள திரைக்கதையின் வேகம் ரசிகர்களை மிரள வைக்கிறது .
படம் பார்க்கும் ரசிகர்களே பதறுமளவில் மாதவனை போலீசார் விசாரிக்கும் இயல்பான காட்சிகள் !

”திறமையானவர்களை மதிக்காத எந்த ஒரு நாடும் வல்லரசு ஆக முடியாது” 'நான் நிரபராதி என்றால் உண்மையான குற்றவாளி யார்' என இறுதியில் உண்மையான விஞ்ஞானி நம்பி நாராயணனே திரையில் தோன்றி மனமுடைந்து பேசும் வசனங்களால் தியேட்டரில் அதிரும் ரசிகர்களின் கைதட்டல்!
விஞ்ஞானியின் கதையை மையமாக வைத்து கதையின் நாயகனாக
நடிப்பதுடன் இயக்குனராக எந்தவித சினிமா பார்முலா இல்லாமல் மிக அழுத்தமான கதை, திரைக்கதை அமைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ள மாதவனின் முயற்சிக்கு மிக பெரிய பாராட்டு !
’ ராக்கெட்ரி நம்பி விளைவு ' இந்திய அளவில் சிறந்த படத்திற்கான விருது நிச்சயம் !
ரேட்டிங் 4.5 / 5