top of page

'யானை' விமர்சனம்


இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் தொழில்ரீதியாக செல்வாக்காக வாழ்ந்து வரும் ராஜேஷின் பி.ஆர்.வி குடும்பத்தின் முதல்மனைவியின் மகன்களான சமுத்திரக்கனி, போஸ்வெங்கட், சஞ்சீவ் ஆகியோருடன்,,,, ராஜேஷின் இரண்டாம் மனைவியான ராதிகாவுக்கு பிறந்த இளையமகன் அருண்விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் .

ஒரு பிரச்சனையால் ராஜேஷின் பி.ஆர்.வி குடும்பத்திற்கும் ,ஆடுகளம் ஜெயபாலன் (சமுத்திரம்) குடும்பத்திற்கும்,,,,,, தீராத பகை இருக்கின்றது .

அருண்விஜய்யின் கல்லூரி நண்பனை ஜெயபாலனின் இரட்டைமகன்களில் ஒருவரான ராமசந்திர ராஜு (பாண்டி) கொலை செய்த பிரச்சனையில்,,,,, அருண்விஜய் போலீசில் புகார்அளிக்க ,,, ஒருகட்டத்தில் இருதரப்பும் காவல்நிலையத்தில் சமரசம் பேச முயலும் நேரத்தில்,,,

ஜெயபாலனின் மகன் ராமசந்திர ராஜு (பாண்டி) போலீசின் கைதுப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட்டுதள்ள ,,, அங்கிருக்கும் உயர்அதிகாரியால் ராமசந்திர ராஜு (பாண்டி) துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோகிறார் .


இந்தபிரச்சனையால் இருகுடும்பமும் ஒருவருக்கொருவர் வெறிகொண்ட பகைவர்களாக மாறுகின்றனர் .


இதற்கிடையில் சமுத்திரக்கனியின் மகள் அம்முஅபிராமி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் முஸ்லீம் மாணவனை விரும்ப ,,,, அதேகல்லூரியில் பணிபுரியும் பிரியாபவானிசங்கரை அருண்விஜய் காதலிக்கிறார் .இந்நேரத்தில் ஜெயபாலனின் மற்றொரு மகனான ராமசந்திர ராஜு (லிங்கம்) உயர்அதிகாரியை கொன்றவிவகாரத்தில் ஜெயிலில் இருந்து வெளியேவர,,,,, அருண்விஜய்குடும்பத்தை அழிக்கநினைக்கும் ஜெயபாலனின் மகனால் மீண்டும் பிரச்சனை ஆரம்பமாகிறது .


திடீரென ஒருநாள் காலேஜிக்கு செல்லும் சமுத்திரக்கனியின் மகள்அம்முஅபிராமி தன் காதலனுடன் யாருக்கும் தெரியாமல் சென்று விட ,,,,,,,,

அம்முஅபிராமியின் காதல்விவகாரம் அருண்விஜய்க்கு தெரிந்தும் தன்மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்ததாக சொல்லி ராஜேஷின் முதல்தாரத்து மகன்களான ஜாதிவெறிகொண்டசமுத்திரக்கனியும் அவரதுசகோதரர்களும் அருண்விஜய்யையும் ,ராதிகாவையும் வீட்டைவிட்டுவெளியே துரத்துகின்றனர் .

இதுதான் சரியானசந்தர்ப்பம் எனசமுத்திரக்கனியின் ஆட்களைவைத்தேஅருண்விஜய்யின் அண்ணன்களை கொலைசெய்யதிட்டமிடுகிறார் ராமசந்திர ராஜு (லிங்கம்) !


கொலைகார ராமசந்திர ராஜுவிடமிருந்துஅருண்விஜய் அண்ணன்களை காப்பாற்றினாரா ?

தன்காதலனுடன் சென்ற அம்முஅபிராமியின் நிலைஎன்ன ?


அருண்விஜய் அம்முஅபிராமியை கண்டுபிடித்து சமுத்திரக்கனியிடம் ஒப்படைத்தாரா ?

சமுத்திரக்கனியால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்றுசேர்ந்ததா ? என்றகேள்விக்கு பதில்சொல்லும் படம்தான் 'யானை'


மிரட்டும் உடற்கட்டுடன் அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக , காதல் ,செண்டிமெண்ட் ,ஆக்க்ஷன் என நடிப்பில் படம் முழுவதும் பட்டையை கிளப்புகிறார் அருண்விஜய் .

முக்கியமாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.நாயகியாக பிரியாபவானிஷங்கர்கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு .


ஜிம்மியாக வரும் யோகிபாபு சிலஇடங்களில்இமான்அண்ணாச்சியுடன் சேர்ந்து சிரிக்க வைக்கிறார் .

ராஜேஷ் ,சமுத்திரக்கனி , அம்முஅபிராமி ,போஸ்வெங்கட் , சஞ்சீவ் ,ஆடுகளம் ஜெயபாலன், ’கே.ஜி.எப்’ ராமசந்திர ராஜு,தலை வாசல் விஜய் ,புகழ் , ராதிகா ,ஐஸ்வர்யா என நடித்த அனைவருமே நடிப்பில் தங்கள்பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


G V பிரகாஷின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் பின்னணி இசையில் அதிரடியான மிரட்டல் !!


திரைக்கதையின் வேகத்திற்கு இணையாககோபிநாத்தின் ஒளிப்பதிவு .


இருகுடும்பத்து பகை , பழிவாங்கதுடிக்கும் வில்லன் , கூட்டுகுடும்பம் , நாயகனின் காதல் , கதையோடு இணைந்து வரும் காமெடி என இயக்குனர் ஹரி வழக்கமான முத்திரையுடன் ராக்கெட் வேகத்திற்கு இணையான

கதை ,திரைக்கதை அமைப்பில் காதல் ,அதிரடிஆக்க்ஷன். செண்டிமெண்ட் எனஅனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான கதைக்களத்தில் 'யானை' என்ற தலைப்புக்குயேற்றபடி ரசிகர்கள் ரசிக்கும்படி அதிரடியான ஆக்க்ஷன் படத்தை

தந்துள்ளார் இயக்குனர் ஹரி !!


அனல் பறக்கும் ஆக்க்ஷன் 'யானை'


ரேட்டிங் 3. 5 / 5


bottom of page