top of page

'கார்கி' விமர்சனம் !

Updated: Jul 16, 2022


பள்ளி ஆசிரியை சாய்பல்லவியின் அப்பா ஆர் எஸ் சிவாஜி

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார் .


தன்னுடன் இணைந்து வேலை பார்க்கும் லிவிங்ஸ்டன் மகளை திருமண நிச்சயம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் வருவதால்,, இரவு 6 மணிக்கு மேல் லிவிங்ஸ்டன் வராத நிலையில் அவரது வேலையையும் சேர்த்தே ஆர் எஸ் சிவாஜி பார்க்கிறார் .


இந்நேரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் 4 பேர் கொண்ட கும்பலால் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரத்தினால் சிதைக்கப்பட ,,,, 5வது குற்றவாளியாக செக்யூரிட்டி ஆர் எஸ் சிவாஜியையும் கைது செய்து காவலில் வைத்து போலீஸ் விசாரிக்கிறது .


சாய்பல்லவி போலீஸ் காவலில் இருக்கும் அப்பாவை பார்க்க போராடும் நிலையில் ,,,,எந்த குற்றமும் செய்யாத தன் அப்பாவை 5வது குற்றவாளியாக போலீசார் கைது செய்துள்ளதால் அவரை காப்பாற்றும்படி வக்கீல் ஜெயபிரகாஷிடம் முறையிட ,,,, சிறுமி சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கு என்பதால் சாய்பல்லவி அப்பாவுக்கு ஆஜராகி வாதாட பார் கவுன்சில் ஜெயபிரகாஷுக்கு தடை போடுகிறது .



இந்த வழக்கை விசாரிக்க திருநங்கையான சுதாவை அரசு நியமிக்க,,,,


குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர அரசு வக்கீல் கவிதாலயா கிருஷ்ணன் வாதாட,,,, ஜெயபிரகாஷுடம் ஜூனியராக இருக்கும்

வக்கீல் காளி வெங்கட் சாய்பல்லவி அப்பா சிவாஜிக்காக ஆஜராகி

வாதாடமுன் வருகிறார்.

இறுதியில் பாலியல் குற்ற வழக்கில் இருந்து ஆர் எஸ் சிவாஜி விடுவிக்கப்பட்டாரா ?

அப்பாவை காப்பாற்ற போராடிய சாய்பல்லவி,,,,, அதில்,,,,, வெற்றி,,,,,

பெற்றாரா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்

படம்தான் 'கார்கி'


தந்தையை காப்பாற்ற போராடும் நேர்மை குணம் கொண்ட 'கார்கி'யாக

படம் முழுவதும் வாழ்கிறார் சாய்பல்லவி.


அமைதியான அழுத்தம் நிறைந்த கதாபாத்திரம் என்பதால் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் அளவில் தனித்துவமான நடிப்பினால் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார் சாய்பல்லவி .


பாராட்டும்படியான நடிப்பில் காளி வெங்கட்,,,,, கோர்ட்டில் வாதாடும்போது திக்கு வாய் பிரச்சனையால் அவர் அவதிப்படும் காட்சிகளில் இயல்பு !


பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக கலைமாமணி சரவணன் ,ஆர் எஸ் சிவாஜி ,லிவிங்ஸ்டன்,ஜெயபிரகாஷ் , கேப்டன் பிரதாப் , வேதா பிரேம்குமார் , கவிதாலயா கிருஷ்ணன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .



இவ் வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக திருநங்கையான சுதா,,, அவர் பேசும் அழுத்தமான வசனங்களால் படம் பார்க்கும் ரசிகர்களிடையே கை தட்டலுடன் சேர்ந்த கரகோஷம்,,,

தமிழ் சினிமாவில் மரியாதைமிக்க மாண்புமிகு நீதியரசர் கதாபாத்திரத்தில் திருநங்கையை தேர்வு செய்து நடிக்க வைத்ததில் இயக்குனரின் சிந்தனைக்கு குவியும் பாராட்டுக்கள் !


கோவிந்த் வசந்தாவின் இசையில் வயலினால் பின்னணி இசையில் மிரட்டுகிறார் !


ஸ்ரையந்தி & பிரேம் கிருஷ்ணா அக்கடு ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !


பாலியல் வன்கொடுமையால் சிதைக்கப்பட்ட சிறுமியின் கதறலுடன்..... பாலியல் குற்றவாளி என கைது செய்யப்பட்ட தந்தையை காப்பாற்ற போராடும் நேர்மை குணம் கொண்ட நீதி மகள்தான் 'கார்கி'


இந்த கதையை மையமாக கொண்டு அழுத்தமான கதை, திரைக்கதை அமைப்புடன் குற்றவாளியை யாருமே யூகிக்க முடியாத வகையில் படம் பார்க்கும் ரசிகர்களே பதறும்படி,,,,, குற்றவாளி படத்தின் முடிவில் சாய்பல்லவியிடம் மாட்டிக்கொள்ளும் அதிர்ச்சியான க்ளைமாக்ஸ்

காட்சி என,,, அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிக சிறந்த படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன்.


மதுவுக்கும் புகையிலைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசு,,,,,,,,


பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தால் போக்சோ சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும்

என அரசே இனிவரும் காலங்களில்,,,,,, தியேட்டர்களில் படம் பார்க்கும் மக்களுக்கு ஆரம்பத்தில் முகவுரை அளிக்குமானால்

மக்களிடையே விழிப்புணர்வை தந்த சிறந்த படமாக 'கார்கி' அமையும்


ரேட்டிங்..... 5 / 5


bottom of page