’காட்டேரி’ - விமர்சனம் !

தங்கப்புதையலைத் தேடி வைபவ் , சோனம் பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா ஆகியோர் ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர்.
அக் கிராமத்தில் இருந்தவர்கள் கோவில் திருவிழா நடக்கும்போது மின்சாரம் தாக்கி பல வருடங்களுக்கு முன்பே ஒட்டுமொத்தமாக இறந்ததால் எல்லோரும் பேயாக அலைகின்றனர். இதனால் தங்கப் புதையலை தேடி வந்தவர்களை பேய் கூட்டம் பயமுறுத்துகிறது.
அந்த பேய்கள் திரியும் கிராமத்தில் இருந்து வெளியேற வைபவ் முயற்சி செய்கிறார். ஆனால், அடுத்தடுத்து வரும் அதிர்ச்சியான பிரச்சனைகள் அவர்களுக்கு காத்திருக்கும் நிலையில் அந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால் மீண்டும் அதே கிராமத்திற்கு அனைவரும் வருகிறார்கள்.
இறுதியில் வைபவ் தன் நண்பர்கள் மற்றும் மனைவி சோனம் பாஜ்வாவுடன் பேய் கிராமத்தில் இருந்து தப்பித்தாரா?
அவர்கள் தேடி சென்ற தங்க புதையல் அவர்களுக்கு கிடைத்ததா ? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் படம்தான் ’காட்டேரி’
வைபவ் ,சோனம் பஜ்வா, ஆத்மிகா ,பொன்னம்பலம், ரவி மரியா, ஜான் விஜய், மைம் கோபி,குட்டி கோபி, நமோ நாராயணன் என படத்தில் நடித்துள்ள அனைவரும் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .
முக்கியமாக மாதம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமிசரத்குமார், நான் அழகா இருக்கேனா? எனக் கேட்கும்போதே படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும்படி நடிப்பில் மிரட்டுகிறார்.
இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத் இசையில் பேய் படத்திற்கு உண்டான திகில் கலந்த மிரட்டலான பின்னணி இசை !
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
பேய் கதையில் காட்டேரியையும் இணைத்து காமெடி திகில் கதையாக இறுதியில் வைபவையும் நண்பர்களையும் காட்டேரி படுத்தும் பாடு,,,,, குறிப்பாக காட்டேரியால் ரவி மரியா படும் அவஸ்தை தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது !
வித்தியாசமான கதை களத்தில் பயமுறுத்தும் பேயுடன் இணைந்த காட்டேரி செய்யும் சேட்டைகளுடன் காமெடி பேய் படத்தை பார்க்க வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இப் படத்தை இயக்கியுள்ளார் 'யாமிருக்க பயமே' என்ற காமெடி பேய் படத்தை இயக்கிய டி கே !
ரேட்டிங் . 3 . / 5