top of page

கோடைகால உச்சத்தின் தாக்கத்தை தாண்டும் AttiCulture வழங்கும் "சாரி பாப்" உற்சாக பாடல் !


AttiCulture வழங்கும் "சாரி பாப்" கோடைகால உச்சத்தின் தாக்கத்தை தாண்டும் உற்சாக பாடல் !


டாடி பிரின்ஸ் என்று அழைக்கப்படும் என்ஆர்ஐ நடிகரும் ராப்பருமான ஆஷ் பிரின்ஸ் அவர்களால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பாடல் இது. ஜாக்கி ஷெராஃப் மற்றும் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் “கொட்டேஷன் கேங்” படத்தில் இவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். கென் ராய்சன் இயக்கத்தில் வைரலான "ஜோர்த்தாலே" மற்றும் "செம்ம போத" பாடலின் இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஆஃப்ரோ மற்றும் கென் இருவரும் ஆட்டி கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள்.


இந்த வீடியோ பாடலை Emporor Productions சார்பில் ஆஷ் பிரின்ஸ் மற்றும் PKR Productions சார்பில் பிரனய் காளியப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த பாடலில் ஓவியா ஹெலன், யாஷிகா ஆனந்த், அனுக்ரீத்தி வாஸ், விஷாகா திமான், அனன்யா ராவ், அபூர்வ ராவ், ரோகினி முஞ்சால், சாதியா அலி மற்றும் தேவிகா சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.


தமிழ்நாட்டிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இசையின் வேரை இணைக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது, இந்திய பாரம்பரிய உடையான சேலைக்கு ஒரு டிரெண்டை உருவாக்கும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. புடவை பாப் சவால் தற்போது ஆன்லைனில் பிரபலமாக உள்ளது குறிப்பிடதக்கது.

bottom of page